
ராக்ஸ்டார் தேவிஶ்ரீ பிரசாத்தின் மற்றொரு முகத்தை காட்டும் ஜாலி ஓ ஜிம்கானா – சன் நெக்ஸ்ட்-இன் புதிய நிகழ்ச்சியில்,
அவரது துள்ளல் இசையில் நீங்கள் ஆடியிருப்பீர்கள் அவரது மெல்லிசையில் உருகியிருப்பீர்கள். ஆனால், ‘ஜாலி ஓ ஜிம்கானா’ நிகழ்ச்சியில் நீங்கள் காணப்போகும் தேவி ஸ்ரீ பிரசாத் முற்றிலும் புதியவர். சன் நெக்ஸ்ட் (Sun NXT) தளத்தின் பிரத்யேக டாக் ஷோவின் முதல் எபிசோடில், எவ்வித திட்டமிடலும் இன்றி, தனது இயல்பான முகத்தை காட்ட வருகிறார் ராக்ஸ்டார் தேவிஶ்ரீ பிரசாத்.
தொகுப்பாளர் ஜெகன் கிருஷ்ணன் இந்தப் பேட்டியில் டிஎஸ்பியை கேள்விகளால் துளைத்தெடுக்கவில்லை, மாறாக அவருக்குள் இருக்கும் உற்சாகத்தை முழுமையாக வெளியே கொண்டு வருகிறார். கட்டுப்பாடற்ற விளையாட்டுகள், இதுவரை கேட்டிராத ரகசியங்கள் எனத் திரையில் ஒரு மேஜிக் நிகழப்போகிறது.
“நான் இசையமைப்பாளர் டி.எஸ்.பி.யாக அங்கே வரவில்லை, உண்மையான தேவிஶ்ரீ யாக, மனதார மகிழ்ந்த தருணங்கள் அவை, என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் தேவிஶ்ரீ பிரசாத்.
தந்தையின் நினைவுகளும், MJ-ன் தாக்கமும் :
அதிவேக ஆட்டம் பாட்டங்களுக்கு மத்தியில், ஒரு மகனாக தனது தந்தை மீதான அன்பை பகிரும் தருணம் காண்போரை கண்கலங்க செய்யும். தந்தை மறைந்த பிறகு அவருக்கு எழுதிய கடிதம் மற்றும் ‘நன்னாகு பிரேமதோ’ (Nannaku Prematho) ஆல்பம் உருவான விதம் குறித்து அவர் உருக்கமாகப் பேசியுள்ளார்.
மேலும், தனது ரோல் மாடல் மைக்கேல் ஜாக்சன் பற்றி பேசியதுடன், மேடையிலேயே அவர் பாணியில் நடனமாடி அரங்கத்தையே அதிரவைத்தார் தேவிஶ்ரீ பிரசாத்.
தமிழ்நாடா அல்லது ஆந்திராவா ?
ரசிகர்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்த ஒரு கேள்விக்கு இந்த எபிசோடில் விடை கிடைத்துள்ளது. “தமிழ் மற்றும் தெலுங்கு, இந்த இரண்டு திரையுலகில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது ? என்ற ஜெகனின் கேள்விக்கு டி.எஸ்.பி. அளித்த பதில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும்.
‘ஆஃபீஸ் கானா’ (Office Gaana) பேண்டின் அதிரடி இசையுடன் தொடங்கும் இந்த தொடரில், அடுத்தடுத்த வாரங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ், ரவி மோகன், துருவ் விக்ரம், மிர்ச்சி சிவா, பிரேம்ஜி, ஹரிஷ் கல்யாண், மஹத் ராகவேந்திரா, வைபவ், அஸ்வின் கக்குமனு, கோபி மற்றும் சுதாகர் என பல நட்சத்திரங்கள் பங்கேற்க உள்ளனர்.