சென்னை கே.கே. நகரில் பிரமாண்டமான புதிய படப்பிடிப்பு பங்களா திறப்புவிழா !
சென்னை புறநகரில் மட்டுமே அதிகமான படப்பிடிக்குத் தேவையான வீடுகள் இருக்கின்றன. அங்கு படப்பிடிப்பை நடத்தினால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அதிகமான நேரம், மற்றும் எரிபொருள்,வீணாகி வருகிறது. இதனால் குறிப்பிட்ட நேரத்தில் , குறிப்பிட்ட நாட்களில் படப்பிடிப்பை முடிக்க முடியாமல் போகிறது என்பது அனைத்து சினிமா தொழிலாளர்களுக்கும் தெரிந்த விஷயம்.
தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மஸ்கட் சி.ராமலிங்கம் ” ராம் ஸ்டுடியோஸ் நிறுவனம்” மூலம், எண்.452, ஆர்.கே.சண்முகம் சாலை, கே.கே நகர் என்கிற முகவரியில் ” நேத்ரா ஷூட்டிங் ஹவுஸ் ” என்ற சொகுசு ஷூட்டிங் பங்களாவை உருவாக்கி உள்ளார். வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் கொண்டு இதை உருவாக்கியுள்ளனர்.
இதை தவிர வெளிப்புற படப்பிடிப்புக்கு இடம் தேவையென்றால் அதற்கும் புறநகரிலேயே பேக்டரி செட்டப்,
திருமண மண்டபம்,
மாந்தோப்பு, பார் செட்டப், நெல்லித்தோட்டம்,
தென்னந்தோப்பு,
வில்லேஜ் செட்டப், மற்றும் பிரம்மாண்ட செட்டுகள் போட தரிசு நிலம் என படப்பிடிப்பிற்கு தேவையான அனைத்து வசதிகளையும்
“ராம் ஸ்டுடியோஸ்” நிறுவனத்தினர்
செய்துள்ளனர்.
உதவி இயக்குனராக இருந்து இயக்குனராக முதல் படம் இயக்கும் இயக்குனர்களுக்கு சலுகைகளும் தர இருப்பதாக தெரிவித்துள்ளனர்.