பழம்பெறும் நடிகர் சந்திரபாபு வின் பேரன் இயக்கி, நடித்துள்ள “தெற்கத்திவீரன்” டிசம்பர் -2 வெளியீடு

ஒரு திரைப்படத்தில் பல பொறுப்புகளை ஏற்று அதை திறம்படச் செய்யும் படைப்பாளனை தமிழ் சினிமா அஷ்டாவதானியாக அரவணைத்துக்கொள்ளும். அப்படியொரு கலைஞனாக தன்னை அடையாளப்படுத்த முனைந்து ‘தெற்கத்தி வீரன்’ படம் மூலம் அறிமுகமாகிறார் சாரத்.
சந்திரபாபு பிலிம் ஃபேக்டரி பட நிறுவனம் சார்பில் அறிமுக நாயகன் சாரத், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கி, தயாரித்து, நாயகனாக அறிமுகம் ஆகும் படம் ‘தெற்கத்தி வீரன்’. இப்படத்தில் சாரத்தின் நண்பர்களாக ’முருகா’ அசோக், ‘நாடோடிகள்’ பரணி, ’மாரி’ வினோத் ஆகியோர் நடிக்கின்றனர். நாயகனின் தந்தையாக வேல ராமமூர்த்தி நடித்துள்ளார். மேலும் மதுசூதனன், கபீர் துஹான் சிங், பவன், ஆர்.என்.ஆர்.மனோகர், நமோ நாராயணா, ராஜசிம்மன், ஆர்யன், ரேணுகா, உமா பத்மநாபன் என பெரும் நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் நடித்துள்ளனர்.

படம் பற்றி படத்தின் நாயகனும் இயக்குனருமான சாரத்திடம் கேட்டபோது, “தூத்துக்குடியில் நடக்கும் சில சம்பவங்களின் தொகுப்பே ‘தெற்கத்தி வீரன்’ கதை. எனது சொந்த ஊரும் தூத்துக்குடிதான். அங்கு நடந்த உண்மை சம்பவத்தையே நான் படமாக்கியுள்ளேன். 5 வில்லன்கள் நான்கு நண்பர்களுக்கிடையே எழும் பகையும் அதனால் நடக்கும் மோதல்கள் அதற்குள் பின்னப்பட்ட ஒரு காதல் என திரைக்கதை, விறுவிறுப்பாகவும் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தும். படத்தில் 8 சண்டை, 5 பாடல்கள் இடம்பெறுகிறது. ஸ்ரீகாந்த் தேவா இசையில் தேவா சார் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஓபனிங் பாடல் பாடியுள்ளார். தூத்துக்குடி துறைமுகத்தில் படமான இந்த பாடல் காட்சியில் சாண்டி மாஸ்டர் அழகாக நடனம் அமைத்துக்கொடுத்தார். அதிரடி சண்டை காட்சிகள் ஆக்‌ஷன் ப்ரியர்களுக்கு விருந்தாக அமையும்” என்றார்.


இதுதான் எனக்கு முதல் படம். யாரிடமும் நான் உதவி இயக்குனராக இருந்ததில்லை. எனது மானசீக குருவே சினிமாதான். தவிர இன்றும் தமிழ்சினிமாவால் கொண்டாடப்படும் சந்திரபாபுவின் பேரன் நான். அவரது ரத்தம் எனக்குள்ளும் இருப்பதால் நான் சினிமாவுக்கு வர காரணமாக இருக்கலாம். ‘தெற்கத்தி வீரன்’ ரசிகர்களை கவரும் என்று நம்புகிறேன்” என்றார்.

நாயகனின் நண்பராக வரும் அசோக் படம் பற்றி பேசுகையில், “நாயகனாக நடித்துவரும் எனக்கு இப்படியொரு கேரக்டர் சரிபட்டு வருமா என்று முதலில் தயங்கினேன். ஆனால் சாரத் என்னிடம் கதை சொன்ன விதமும் கதையும் பிடித்திருந்ததால் நடிக்க சம்மதித்தேன். டி.ஆர்.போல எல்லா திறமைகளும் கொண்டவர் சாரத். இந்த படம் எனக்கு முக்கியமான படமாகவும் இருக்கும்.” என்றார்.

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிடம் கேட்டபோது, “ஒரு படத்தில் பல பொறுப்புகளை ஏற்று வேலை செய்வது சவாலானது. சாரத் சினிமாவுக்கு புதிது என்றாலும் அனுபவம் பெற்ற இயக்குனர் போல இந்தப் படத்தை சிறப்பாக இயக்கியிருக்கிறார். எனது இசையில் அப்பா பாடிய ”கடலம்மா..” பாடல் சூப்பரா வந்திருக்கு. இந்தப்படத்தில் வில்லனாக நடிக்கவேண்டும் என்று இயக்குனர் என்னிடம் கேட்டார். நான் மறுக்கவே ”கடலம்மா” பாடலில் நடிக்கவைத்துவிட்டார்.”என்றார்.
. டிசம்பர் 2ஆம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில் படத்தின் டிரைலரும், ”கடலம்மா கடலம்மா..” பாடலும் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button