சீனாவில் பிரமாண்டமாக வெளியாகும் “கனா” திரைப்படம் !
சிவகார்த்திகேயன் உடைய Sivakarthikeyan Productions நிறுவனத்தின் சார்பில் முதல் தயாரிப்பாக உருவான படம் “கனா”. இப்படம் தற்போது சீனாவில் மிகப்பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில், சீன மொழியில் பிரமாண்டமாக வெளியாகிறது.
இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் முதன்மை பாத்திரங்களிலும் சிவகார்த்திகேயன் கௌரவ தோற்றத்திலும் நடித்திருந்த “கனா” திரைப்படம், விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடம் ஒருமித்த பாரட்டுக்களை பெற்று, பிரமாண்ட வெற்றி பெற்றது. வசூல் ரீதியாக சாதனை படைத்த இப்படம் மொழிகள் தாண்டியும் பாராட்டு பெற்றது. இப்படம் வெளியான 2018 ஆம் வருடத்தில் பல விருதுகளையும் வென்றது குறிப்பிடதக்கது.
இந்நிலையில் தற்போது இப்படம் சீனாவில் வரும் மார்ச் 18 ஆம் தேதி மிகப்பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகிறது. Yi Shi Films சார்பில் Mr. AlexiWoo, Ms. SarinaYuanfeiWang தமிழ் மொழியில் சீன மொழி சப் டைட்டிலுடனும், நேரடி சீன மொழி யிலும் இப்படத்தை வெளியிடுகின்றனர். முன்னதாகவே சீனாவில் வெளியாகவேண்டிய இப்படம் கோவிட் காரணங்களால் இப்போது வெளியாகிறது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 2.0 படத்திற்கு பிறகு சீனாவில் வெளியாகும் தமிழ்ப்படமாக இப்படம் சாதனை படைக்கவுள்ளது. இதனால் படக்குழுவினர் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.
தொழில்நுட்ப குழுவினர் விபரம்
இயக்கம் – அருண் ராஜா காமராஜ்,
இசை – திபு நிணன் தாமஸ்
ஒளிப்பதிவு – தினேஷ் கிருஷ்ணன்.B
படத்தொகுப்பு – ரூபன்
கலை இயக்கம் – லால்குடி இளையராஜா
நடனம் – சதீஷ் கிருஷ்ணன்
உடை வடிவமைப்பு – பல்லவி சிங்
மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா
D’one
இணை தயாரிப்பு – கலை அரசு
தயாரிப்பு – சிவகார்த்திகேயன்