சாய் தன்ஷிகா நடித்துள்ள “சட்டம் என் கையில்” திரைப்படம் ஜூன் 21 ஆம் தேதி வெளியீடு !
ஸ்ரீ சித்தி விநாயகா மூவி மேக்கர்ஸ் பேனரில் சாய் தன்ஷிகா, அமித் திவாரி நடித்துள்ள படம் “சட்டம் என் கையில்” . இந்தப் படத்தை A. அபிராம் இயக்க, டி.ராஜேஸ்வர ராவ் தயாரித்துள்ளார்.
படம் கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் சாய் தன்ஷிகா இல்லத்தரசியாக நடித்திருக்கிறார். மிஸ்டரி த்ரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தை இயக்குனர் எம்.அபிராம் இயக்கியுள்ளார். கோடி இசை அமைத்துள்ளார். இசையும், பின்னணி இசையும் படத்துக்கு மிக பெரிய பலமாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.
படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து ஜூன் 21ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த படம் குடும்பத்தினர் அனைவரும் பார்க்கும் படமாக இருக்கும் என்றும் சாய் தன்ஷிகாவின் நடிப்பு படத்தின் முக்கிய சிறப்பம்சமாக இருக்கும் என்றும் தயாரிப்பாளர் டி.ராஜேஸ்வர ராவ் தெரிவித்துள்ளார்.
இந்த படம் தெலுங்கில் ‘அந்திம தீர்ப்பு” என்ற பெயரில் வெளியாகிறது.