பிரபாஸ் நடித்த “ராதே ஷியாம்” படத்தின் டிஜிட்டல் பிரிமியர் ஏப்-1ல் வெளியீடு

பிரபாஸ் நடிப்பில் வெளிவந்துள்ள ராதே ஷ்யாம் திரைப்படத்தின் டிஜிட்டல் ப்ரீமியரை Prime Video இன்று அறிவித்துள்ளது. ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் மற்றும் UV கிரியேஷன்ஸ் மற்றும் டி-சீரிஸ் தயாரித்துள்ள, காதல் கதைக் களம் கொண்ட இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாக்யஸ்ரீ, சச்சின் கெடேகர் மற்றும் குணால் ராய் கபூர் ஆகியோரும் நடித்துள்ளனர். வாழ்க்கையை அணுகுவதில் முற்றிலும் மாறுபட்ட கண்ணோட்டத்தைக் கொண்ட இருவரின் காதல் கதை இது. விதியையும் ஊழ்வினையையும் முழுமையாக நம்பும் விக்ரம் ஆதித்யா (பிரபாஸ்) அறிவியலின் சக்தியைப் பெரிதும் நம்பும் பிரேர்னாவிடம் (பூஜா ஹெக்டே) காதலில் விழுகிறார். ராதே ஷியாம் திரைப்படத்தை ஏப்ரல் 1, 2022 முதல் தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீம் செய்யலாம்.

“புதுயுகத்தின், எல்லைகளில்லா சினிமாவைக் கச்சிதமாக எதிரொலிக்கும் கதையே ராதே ஷ்யாம்” என்கிறார் நடிகர் பிரபாஸ். அவர் மேலும் கூறுகையில் “தொலைநோக்குப் பார்வையுடன் செயலாற்றும் இயக்குனர் ராதா கிருஷ்ணா, பூஜா ஹெக்டே மற்றும் எங்கள் மொத்த குழுவினரும் தங்கள் உழைப்பைச் செலவிட்டு அனைவரும் அனுபவிக்கும் வகையில் இத்திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர். டிஜிட்டல் வெளியீட்டின் மூலம் இந்தக் காதலை உங்களிடம் கொண்டு வருவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களிடமிருந்து அன்பையும் ஆதரவையும் தொடர்ந்து பெறுவதை எதிர்பார்க்கிறேன்.” என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button