இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தரின் ஆறாம் ஆண்டு நினைவுநாள் நிகழ்ச்சி!
இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் ஆறாம் ஆண்டு நினைவுநாள் நிகழ்ச்சி சென்னை வளசரவாக்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் அக்சயா முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மகாத்மா ஸ்ரீனிவாசன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
புதுவயல் அசோக்குமார் அரிமா சங்கத்தின் சார்பில் நூறு பூச்செடிகளை நுங்கம்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வழங்கினார். சாய் எலக்ட்ரோ பயோஜெனிக் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் நூறு நபர்களுக்கு முககவசம் மற்றும் சானிடைசர் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் பூவிலங்கு மோகன், ரமேஷ் கண்ணா, தாசரதி, பாடகி சின்மயி,நடிகை காயத்ரி ரகுராம் மற்றும் கலைத்துறையைச் சார்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கே.பாலச்சந்தர் ரசிகர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் கவிதாலயா பாபு,இணைச்செயலாளர் கவிதாலயா பழனிச்சாமி, ஒளிப்பதிவாளர் கண்ணப்பன், எடிட்டர் ராமமூர்த்தி, ஆகியோர் இந்நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினர்.