பணப் பிரச்சனையா? மனப் பிரச்சனையா? அல்லாடும் அட்லி

இயக்குனர் அட்லி நீண்ட நாட்களாக ஹிந்தியில் ஷாருக்கானை வைத்து படம் பண்ணும் முயற்சியில் இருந்து வந்தார். பிறகு ஒரு விதமாக ஷாருக்கான் சம்மதித்து தயாரிப்பு நிறுவனமும் உறுதி செய்தது. அதன்பிறகு மகன் சம்பந்தப்பட்ட வழக்கு விவகாரம் ஷாருக்கானை வேதனையில் ஆழ்த்தியது.

தற்போது படத்தின் பட்ஜெட் அதிகமாக இருப்பதால் படத்தை தயாரிக்க தயாரிப்பு நிறுவனம் தயங்குகிறது. மகன் பிரச்சனையில் ஷாருகானும் மனரீதியாக நொந்து போய் இருக்கிறார். இந்நிலையில் படப்பிடிப்பு குறித்து ஷாருக்கானை அனுகி பேசுவதற்கு அட்லியும் தயங்குகிறார். படம் நடக்குமா நடக்காதா என்பது குறித்து விரைவில் அறிவிக்க இருப்பதாக தெரியவருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button