தணிக்கை குழுவிடம் பணிந்தார் கங்கனா ! எமர்ஜென்சி ரிலீஸ்

கங்கனா ரணாவத் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள படம் ‘எமர்ஜென்சி’. முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி அமல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையப்படுத்தி இந்த படத்தை எடுத்து உள்ளார். கடந்த 6ம் தேதி படம் வெளிவருவதாக இருந்தது. சீக்கிய அமைப்பினர் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், மத்திய தணிக்கை குழு, படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் படம் வெளியாகவில்லை.

தணிக்கை குழுவின் நடவடிக்கைகளை எதிர்த்து கங்கனா மும்பை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். “அரியானா சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு அரசியல் காரணங்களுக்காக தனது படத்துக்கு சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்படுத்தப்படுவதாக” கங்கனா தனது மனுவில் கூறியிருந்தார். சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கினால் ‘எமர்ஜென்சி’ படத்தை வெளியிடலாம் என தணிக்கை குழு பதில் மனு தாக்கல் செய்தது.

இந்தநிலையில் இந்த மனு மீதான விசாரணை நடந்தது. அப்போது தணிக்கை குழு சார்பில் ஆஜரான வக்கீல், படத்தில் இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க நடிகை கங்கனா ரணாவத் ஒப்புக்கொண்டு இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் படத்தில் இருந்து குறிப்பிட்ட காட்சிகளை நீக்குவதால் படத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் தணிக்கை குழு தரப்பில் ஐகோர்ட்டில் கூறப்பட்டது. இதை தொடர்ந்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button