கல்லூரி மாணவர்களுடன் கொரியன் வார்த்தை விளையாட்டை ( Korean Word Game ) விளையாடிய “மேட் இன் கொரியா” படக்குழுவினர் !

இயக்குநர் ரா. கார்த்திக் இயக்கத்தில், ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள ‘மேட் இன் கொரியா’ படக்குழுவினர் சென்னையிலுள்ள மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி மாணவர்களை சந்தித்து படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர்.

படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்ய அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டதுடன் கொரிய மொழி வார்த்தை விளையாட்டு மற்றும் ’திஸ் ஆர் தட்’ (This or That) போன்ற ஃபன் விளையாட்டுகள் விளையாடி மாணவர்களுடன் கலகலப்பாக கலந்துரையாடினர்.

ரா. கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் ப்ரீமியர் ஆகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button