பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகும் “எக்ஸாம்” தொடரின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

வால்வாட்சர்  ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) நிறுவனத்தின் சார்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் A. சற்குணம் எழுதி இயக்கியுள்ள இந்த சஸ்பென்ஸ் டிராமாவில், துஷாரா விஜயன் மற்றும் அதிதி பாலன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், அப்பாஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்

‘எக்ஸாம்’ சீரிஸ் மே 15 முதல் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகும். இந்த சீரிஸ் தமிழில் வெளியாவதுடன், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும், ஆங்கிலம் உட்பட 15 மொழிகளில் சப் டைட்டில்களுடன் வெளியாகும்.

இந்தியாவின் மிகவும் பிரபலமான பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, தனது அடுத்த தமிழ் ஒரிஜினல் சீரிஸான ‘எக்ஸாம்’ சீரிஸ் மே 15 அன்று உலகளவில் வெளியிடப்படும் என்று இன்று அறிவித்துள்ளது.  போட்டித் தேர்வுகளின் அழுத்தம் நிறைந்த சூழலை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த சஸ்பென்ஸ் டிராமா, உணர்ச்சி மிகுந்த மற்றும் பதட்டம் நிறைந்த கதையாக உருவாகியுள்ளது.

பிரைம் வீடியோ இந்தியாவின் ஒரிஜினல்ஸ் பிரிவு தலைவர் நிகில் மாதோக் கூறியதாவது, ‘எக்ஸாம்’ என்பது இன்றைய காலத்திற்கு மிகவும் பொருத்தமான ஒரு கதை. போட்டித் தேர்வுகளில் இருக்கும் உணர்ச்சி அழுத்தத்தை மிகச் சிறப்பாக ஒரு திகில் நிறைந்த கதையாக மாற்றுகிறது. இந்த கதை கோடிக்கணக்கான மக்களின் மனதைத் தொடும் என்று நாங்கள் நம்புகிறோம். ‘சுழல், தி வோர்டெக்ஸ்’ (சீசன் 1 மற்றும் 2) மற்றும் ‘வதந்தி — தி ஃபேபிள் ஆஃப் வேலோனி’ ஆகிய தொடர்களின் வெற்றிக்குப் பிறகு, புஷ்கர் மற்றும் காயத்ரியுடன் மீண்டும் இணைவது எங்களுக்கு பெருமையாகும். இந்த கதையை மே 15 அன்று உலகம் முழுவதும் உள்ள எங்கள் பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல ஆவலாக இருக்கிறோம் என்றார்.

கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி கூறியதாவது, ‘எக்ஸாம்’ தொடரின் மூலம், மனிதர்களின் ஆசை, அநீதி, மற்றும் கடைசி கட்டத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் நெறிமுறை சிக்கல்கள் ஆகியவற்றை சொல்ல முயன்றோம். இந்தக் கதையின் மையத்தில், சிக்கலான சூழ்நிலையில் தன்னை பலவீனமாக்கி கொள்ளாமல், துணிந்து போராடும்  ஒரு இளம் பெண் இருக்கிறார். ஒரு அநீதி நிறைந்த அமைப்புக்கு எதிராக நின்று அவள் போராடுவது தான் இந்த கதை. எங்கள் கதைகளை உலகளவில் கொண்டு செல்ல பிரைம் வீடியோ எங்களுக்கு சிறந்த கூட்டாளியாக இருந்து வருகிறது. அதுபோலவே எக்ஸாம் சீரிஸையும் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல இது சரியான தளமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button