டாக்ஸிக் படத்தின் உணர்வுகளை வெளிப்படுத்தும் “தடுமாறுதே” பாடல் வெளியீடு !

தபாஹி’ பாடலுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, டாக்ஸிக் எ ஃபேரி டேல் ஃபார் குரோன் -அப்ஸ் ( Toxic: A Fairy Tale for Grown -Ups) திரைப்படத்தில் இடம்பெறும் ‘தடுமாறுதே’ எனும் இரண்டாவது பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்தப் பாடல் காதலின் புதிய பரிமாணத்தை வெளிப்படுத்துகிறது. ‘தபாஹி’ பாடல், தீவிரமான காதலின் பரவசத்தை கொண்டாடிய நிலையில், ‘தடுமாறுதே’ பாடல் மென்மையான உணர்வுகள், ஏக்கம், சொல்லப்படாத விசயங்கள் என மனதின் ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் உணர்வு பூர்வமான தளத்தை விவரிக்கும் இந்த பாடல், ஒவ்வொரு காதல் கதையும் பல லேயர்களை கொண்டது என்பதையும், அதன் ஒவ்வொரு அத்தியாயமும் காதலின் வெவ்வேறு முகங்களை வெளிப்படுத்துகிறது என்பதையும் நமக்கு நினைவூட்டுகிறது.
‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் மற்றும் தாரா சுதாரியா இணைந்து நடித்துள்ள ‘தடுமாறுதே’ பாடல் ராயா மற்றும் ரெபெக்காவின் உறவை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் காட்சிப்படுத்துகிறது. அவர்களின் இணக்கமான நடிப்பில் ஒருவித விளையாட்டுத்தனம் மிகுந்த இயல்பு வெளிப்பட்டாலும், அதற்குள் உணர்வுபூர்வமான முரண்பாடுகளும், பகிர்ந்து கொள்ளப்படாத ஏக்கமும் மறைந்திருக்கின்றன.

‘தபாஹி’ பாடலில் ரசிகர்கள் பார்த்த அதே ராயாவாக அவர் தொடர்ந்தாலும், ரெபெக்காவை அவர் நேசிக்கும் விதம், அவரது மென்மையான மற்றும் கவலையற்ற பக்கங்களை வெளிப்படுத்துகிறது. அதே தருணத்தில் தனக்குள் அவர் சுமந்து கொண்டிருக்கும் குழப்பத்தையும் உணர்த்துகிறது.
இப்பாடல் குறித்து இசையமைப்பாளர் தனிஷ்க் பாக்சி பேசுகையில், அர்ஸ்லான் நிஜாமி, ஃபஹீம் ஆகியோருடன் நான் மீண்டும் இணைந்து பணியாற்றியுள்ளதால் ‘தடுமாறுதே’ பாடல் எங்கள் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானதாக அமைந்துள்ளது. அதிலும் ‘டாக்ஸிக்’ போன்ற பிரம்மாண்டமான திரைப்படத்திற்காக இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளது இன்னும் சிறப்பானதாக அமைகிறது. மிகுந்த திறமைசாலியான சித்தார்த் பஸ்ரூருடன் இணைந்து பணியாற்றியது எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. அவர் இப்பாடலுக்கு மிகுந்த ஆழத்தை வழங்கியுள்ளார். ராயா மற்றும் ரெபெக்கா ஆகிய கதாபாத்திரங்களின் உணர்வுபூர்வமான பயணத்தை இப்பாடல் அழகாக காட்சிப்படுத்துகிறது. காதல், ஏக்கம் மற்றும் காதலின் விளையாட்டுத் தனமான உணர்வுகள் இதில் வெளிப்பட்டுள்ளன. நாங்கள் இந்தப் பாடலை உருவாக்கிய போது எவ்வளவு ரசித்தோமோ, அதே அளவு உணர்வுபூர்வமாக பார்வையாளர்களும் இதனுடன் ஒன்றிணைவார்கள் என நம்புகிறோம் என்றார்.



