மிஷ்கின் இசையில், விதார்த் நடிக்கும் “டெவில்” திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

மாருதி பிலிம்ஸ் R இராதாகிருஷ்ணன் மற்றும் S.ஹரி சார்பில் ‘டச் ஸ்கிரீன் எண்டர்டெயின்மெண்ட்’ P.ஞானசேகர் தயாரிக்கும் படம் “டெவில்”. இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில், இயக்குநர் மிஷ்கின் முதல் முறையாக இசையமைக்கும் “டெவில்” படத்தின் படப்படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது.

மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுமாகும், இப்படம் அறிவிக்கப்பட்ட போதே, ரசிகர்களிடம் பெரும் ஆவலை தூண்டியது. ரசிகர்களை இருக்கை நுணியில் கட்டிப்போடும் புதுமையான திரில்லராக ‘டெவில்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபா ஶ்ரீ ஆகியோருடன் இயக்குநர் மிஷ்கின் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் டீசர் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button