“இடம் பொருள் ஏவல்” படத்தின் இயக்குனர் சீனு ராமசாமயை வாழ்த்திய பாலபாரதி Ex MLA
திண்டுக்கல் மற்றும் கொடைக்கானல் மலை விவசாய கிராமங்களில் படம் பிடிக்கப்பட்ட #இடம்பொருள்ஏவல் திரைப்படத்தை சிறப்பு காட்சியில் பார்த்து அப்பகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. கே.பாலபாரதி படத்தின் இயக்குனர் சீனு ராமசாமயை பாராட்டியுள்ளார்.
விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், நந்திதா, ஐஸ்வர்யா ரஜேஷ் நடிப்பில்
திருப்பதி பிரதர்ஸ் இயக்குனர் என்.லிங்குசாமி, என்.சுபாஷ் சந்திரபோஸ் தயாரிப்பில், யுவன், வைரமுத்து பாடல்களில் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய கதைக்கு திரைக்கதை வசனம் எழுதி இயக்குனர் சீனு ராமசாமி இயக்கிய இடம் பொருள் ஏவல் திரைப்படம். இந்தப் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.