“ஐ, நோபடி” ( I, Nobody ) படத்தின் விமர்சனம்

பிருதிவிராஜ் புரொடக்சன்ஸ் & E4 எக்ஸ்பெரிமென்ட்ஸ் நிறுவனங்கள் சார்பில், சுப்ரியா மேனன், முகேஷ் ஆர் மேத்தா, சி.வி. சாரதி தயாரிப்பில், பிருதிவிராஜ், பார்வதி திருவோத்து, ஹக்கிம் ஷாஜகான், அசோகன், விஜயராகவன் உள்ளிட்டோர் நடிப்பில், நிசாம் பசீர் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “ஐ, நோபடி” ( I, Nobody )

கதைப்படி.. ராஜீவன் ( பிருதிவிராஜ் ) வங்கி ஒன்றிற்குள் செல்கிறார். அப்போது முகமூடி அணிந்த கொள்ளையர்கள் மூன்றுபேர் உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்தி பணத்தை கொள்ளையடித்து விட்டு, ராஜீவனை பிணைய கைதியாக பிடித்துச் சென்று, அவர் மீது தாக்குதல் நடத்தி இறக்கி விடுகின்றனர். பின்னர் எதிர்பாராத விதமாக அந்த மூன்று பேரும் விபத்தில் மரணம் அடைகின்றனர். கொள்ளையடித்த பணமும் மாயம் ஆகிறது.

அதன்பிறகு போலீஸ் விசாரணைக்கு உள்ளாகிறார் ராஜீவன். அவரது மனைவி மீரா (பார்வதி திருவோத்து ) அவரை அழைத்துச் செல்கிறார். வீட்டில் தனது மகளுக்கு கதை சொல்கிறார் ராஜீவன். அப்போது மீராவுக்கும், வங்கி மேலாளருக்கும் தொடர்பு இருந்ததால் அவரை கொள்ள வங்கிக்கு சென்றதாக, முயல் ரூபத்தில் கதை சொல்கிறார். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெறும் தருவாயில், இருவரும் பேசாமல் வாழ்ந்து வருகின்றனர்.

இதற்கிடையில் பலரும் மாயமான பணத்தை தேடி அழைக்கின்றனர். பணம் ராஜீவனிடம் தான் இருக்கிறது என அவருக்கு தொல்லை கொடுப்பதோடு, தாக்குதலும் நடத்துகின்றனர். இந்நிலையில் அவரது மகள் கடத்தப்பட, பணத்தைக் கேட்டு மிரட்டுகிறது ஒரு கும்பல். மகளை ராஜீவன் கடத்தியதாக போலீஸும், மீராவும் நினைக்கின்றனர்.

மாயமான பணம் ஏங்கே யாரிடம் இருக்கிறது ? கடத்தப்பட்ட மகள் மீட்கப்பட்டாரா ? குடும்ப பிரச்சினை தீர்ந்ததா ? என்பது மீதிக்கதை..

நடுத்தர குடும்பத்தை சேர்ந்த சாதாரண அரசு ஊழியர், குடும்ப பிரச்சினை காரணமாக கொள்ளை சம்பவத்தில் சம்பந்தப்பட்டதால், அவரும் அவரது குடும்பமும் படும் வேதனை, சமூகத்தின் பார்வை என விறுவிறுப்பான திரைக்கதையுடன் நகர்த்திய இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

பிருதிவிராஜ், பார்வதி திருவோத்து, ஹக்கிம் ஷாஜகான், அசோகன் விஜயராகவன் உள்ளிட்டோர் தங்களது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி, கதாப்பாத்திரத்திற்கு வலு சேர்த்துள்ளனர். ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங், சண்டை காட்சி அமைப்பு பணிகளும் சிறப்பு.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button