“நடு நாடு” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !

சாகித்யா கிரியேஷன்ஸ் மற்றும் தி கிங் மூவி என்டர்டைன்மென்ட்  இணைந்து தயாரித்துள்ள படம் “நடு நாடு”. இத்திரைப்படத்தில்  எழில் மற்றும் அருண்குமார் நாயகர்களாக நடித்துள்ளனர். நாயகியாக அனுஸ்ரீ, முக்கிய கதாபாத்திரத்தில் காந்தாரா புகழ் சம்பத் ராம், கருத்தம்மா ராஜஸ்ரீ உள்ளிட்ட திரை பிரபலங்கள் நடிக்கும் “நடு நாடு” திரைப்படம் மிகப் பெரிய பொருட்செலவில் கடலூர் மற்றும் சென்னையை சுற்றியுள்ள இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது‌.

இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குனர்கள்  ஆர் வி உதயகுமார், பேரரசு, திருமலை உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

குறிப்பாக கல்வியின் முக்கியத்துவம் குறித்து சிறப்பாக திரைக்கதை அமைத்து, இயக்கியுள்ள சந்தோஷ், இசையமைப்பாளர் பரணி, ஒளிப்பதிவாளர் செந்தில் மாறன், எடிட்டர் செல்வம் ஆகியோரின் பணிகளை வெகுவாக பாராட்டி பேசினர்.

பின்னர் படத்தின் இசைத்தட்டை சிறப்பு விருந்தினர்கள் வெளியிட படக்குழுவினர் பெற்றுக்கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button