பிராந்திய மொழி தொடர்களை சர்வதேச அளவில் கொண்டு சேர்க்கும் நிறுவனத்தின் புதிய கிளை சென்னையில்

ஆதித்ய பிர்லா குழுமத்தின் ஒரு பகுதியான “அப்லாஷ் எண்டர்டெயின்மெண்ட்”  நிறுவனம், அதன் பிராந்திய முயற்சிகளை மேம்படுத்தும் நோக்கில், இன்று தென்னக சந்தையில் அதன் விரிவாக்கத்தை அறிவித்து, சென்னையில் பிரத்யேகமாக புதிய அலுவலகத்தை அமைத்துள்ளது. பிராந்திய மொழிகளில் ஓ.டி.டி தளத்தின் வளர்ச்சியில் உற்சாகம் கொண்டிருக்கும், அப்லாஷ் அதன் தென்னக மொழிகளுக்கான மேம்பாட்டை உறுதி செய்யும் நோக்கில்  செயல்படவுள்ளது. ( Sign of Life ) சைன் ஆஃப் லைஃப் நிறுவனத்தின்  இயக்குனர்/தயாரிப்பாளர் பிரமோத் செருவலத், ( Applause Entertainment ) அப்லாஷ் தயாரிப்பாளரான விக்னேஷ் மேனனுடன் இணைந்து, இந்த லட்சியத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லவுள்ளார், அவர் தற்போது தெற்கின் தலைவராக Applause ல் இணைந்துள்ளார்.

சோனி லிவ் க்காக அப்லாஷ் எண்டர்டெயின்மெண்ட் உடன் இணைந்து இரு துருவம் (தமிழ்) தொடரை தயாரித்த பிரமோத், இப்போது அனைத்து மொழிகளிலும் பிரீமியம் தொடர்கள் மற்றும் திரைப்படங்களின் மேம்படுத்தப்பட்ட படைப்புகளை உருவாக்க, தென்னகத்தின் 4 மொழி சந்தைகளிலும் Applause க்கென ஒரு தனித்த இடத்தை உருவாக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார். முன்னதாக, content studio, ஹம்பிள் பாலிடிஷியன் நோக்ராஜ் (கன்னடம்), வதம், மற்றும் குருதி காலம் (தமிழ்) போன்ற தொடர்களையும் தயாரித்துள்ளது. மேலும் இரு துருவத்தின் இரண்டாவது சீசனைத் தயாரித்து வருகிறது. 

இந்த விரிவாக்கம் குறித்து Applause Entertainment  தலைமை நிர்வாக அதிகாரி சமீர் நாயர் கூறுகையில், “ஓடிடி தளமானது  உலகம் முழுதுவதையும் சுருக்கி, ஒரு பெரிய புதிய சந்தையை உருவாக்கியுள்ளது, உண்மையில் ஒரு உலகளாவிய கிராமத்தை உருவாக்கியுள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு நிலங்களிலிருந்தும், ஒவ்வொரு மொழியிலிருந்தும் வெளியாகும் படைப்புகள் எல்லா இடங்களிலும் உள்ள பார்வையாளர்களைச் சென்றடையும் வாய்ப்பை இந்த புதிய சந்தை கொண்டுள்ளது. இந்தி/ஆங்கிலம் பிரிவில் நாங்கள் பெற்ற வெற்றிகளுக்குப் பிறகு, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் உள்ள அற்புதமான திறமைகளுடன் இணைந்து உள்நாட்டு மற்றும் சர்வதேச அரங்கில் வேரூன்றிய உண்மையான கதைகளைச் சொல்ல நாங்கள் உண்மையிலேயே ஆர்வமாக உள்ளோம். எங்களின் இந்த புதிய முயற்சியை மேற்பார்வையிட பிரமோத் நியமிகப்பட்டுள்ளார்.  இது எங்கள் முதல் படியாகும். பிரமோத்தின் விரிவான தொடர்புகள், சந்தை அறிவு மற்றும் ஆக்கப்பூர்வ நிபுணத்துவம் ஆகியவை முக்கியமான தெற்கு சந்தைகளில் எங்களின் தனித்துவமான மையம் & எங்களுக்கான ஒரு மார்க்கெட்டிங் சந்தையை உருவாக்க உதவும்.

பிரமோத் செருவலத்  இது குறித்து பகிர்ந்துகொண்டதாவது., “Applause Entertainment  அதன் தொடக்கத்திலிருந்தே, அனைத்து வகைகளிலும் புதிய முயற்சிகளை நல்ல  படைப்புகளை ஆதரித்து தயாரித்துள்ளது. பிராந்திய படைப்புகள் பெரும் ஆற்றலையும், உள்ளூர், தேசிய மற்றும் சர்வதேச பார்வையாளர்களுடன் வலுவான தொடர்பை ஏற்படுத்துவதற்கான திறனையும் கொண்டுள்ளது. Applause Entertainment  நிறுவனத்தில் சமீர் மற்றும் குழுவுடன் இணைந்து பணியாற்ற இந்த புதிய பாத்திரத்தை ஏற்றுக்கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

Applause Entertainment பற்றி:
ருத்ரா: தி எட்ஜ் ஆஃப் டார்க்னஸ், ப்ளடி பிரதர்ஸ், கிரிமினல் ஜஸ்டிஸ், ஸ்கேம் 1992: தி ஹர்ஷத் மேத்தா ஸ்டோரி, ஹாஸ்டேஜஸ் போன்ற  வலுவான உள்ளடக்கம் கொண்ட நிகழ்ச்சிகளையும்,  பல மொழிகளிலும் பிரபலமான தொடர்களையும் உருவாக்கி வெளியிட்டுள்ளது. திரையரங்க வெளியீடு  மற்றும் நேரடி- ஓடிடி ஒளிபரப்பிற்காக ஷர்மாஜி கி பேட்டி, இஃப்திகார் உட்பட்ட படைப்புகளை தயாரித்து வருகிறது.  Applause ன் முதல் படைப்பான,  அபர்ணா சென் இயக்கிய ‘தி ரேப்பிஸ்ட்’, சமீபத்தில் 2021 ஆம் ஆண்டு பூசன் சர்வதேச திரைப்பட விழாவில் மதிப்புமிக்க கிம் ஜிசோக் விருதை வென்றது. Applause Netflix, Disney+Hotstar, Amazon Prime Video, Sony LIV, MX Player போன்ற முன்னணி தளங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது. , ZEE5 மற்றும் Voot Select ஆக்கப்பூர்வ வெளியீட்டினை வெளியிடுகிறது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button