ஆகஸ்ட்-10 க்கு மேல் டெல்டா பிளஸ் வைரஸ் தீவிரமாக பரவும்…! கர்ப்பிணிகள், குழந்தைகள் ஜாக்கிரதை..
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற மருந்துப் பொருட்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தின் அறிமுக விழாவில் பத்திரிகையாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
பில்ஸ்டின் லைப் சயின்ஸ் ( Bilstein Life sciences p Ltd )என்கிற மருந்துப் பொருட்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தின் அறிமுக விழாவில் பிரபல குழந்தையின்மை மற்றும் மகப்பேறு மருத்துவர் திருமதி விக்டோரியா கலந்து கொண்டார். பின்னர் அந்த நிறுவனம் தயாரித்த மருந்து, மாத்திரைகளை அறிமுகம் செய்து சிறப்புரையாற்றினார்.
அப்போது கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக கடந்த காலங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை நினைவு கூர்ந்ததோடு, கொரோனாவின் மூன்றாவது அலை , டெல்டா பிளஸ் போன்ற மிக வேகமாக பரவும் வைரஸ் அடுத்த மாதம் ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்கு மேல் தீவிரமாக பரவும் வண்ணம் உருவெடுத்துள்ளது. இந்த வைரஸானது முழுக்க முழுக்க கர்ப்பிணி பெண்கள், பத்து வயதுக்கு உட்பட்ட சிறுவர் மற்றும் சிறுமிகளை தாக்கும் வல்லமை கொண்டது. ஆகையால் பொதுமக்களும், குழந்தைகளும் விழிப்புடன் இருக்க வேண்டும். அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ் நாடு செய்தித்துறையினர் யூனியன் சங்கத்தின் நிர்வாகிகளின் ஏற்பாட்டின் பேரில், பில்ஸ்டின் லைப் சயின்ஸ் ( Bilstein Life seiences p Ltd ) நிறுவனம் விழாவில் கலந்து கொண்ட பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கியது.
விழாவில் கலந்து கொண்ட பத்திரிகையாளர்கள் தமிழ் நாடு செய்தித்துறையினர் யூனியன் நிர்வாகிகளுடன் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்