இசைஞானி இளையராஜாவுக்கு மரக்கன்றுகள் வழங்கிய பத்திரிகையாளர்கள்…
இசைஞானி இளையராஜாவை தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளும் , உறுப்பினர்களும் சந்தித்து மரக்கன்றுகள், நினைவுப்பரிசு வழங்கி அவருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
இசை உலகின் சக்கரவர்த்தியாக திகழும் இசைஞானி இளையராஜாவை சந்தித்து சங்க உறுப்பினர்களுடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று நேரம் கேட்டிருக்கிறார்கள் தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள். பத்திரிகையாளர்களின் கோரிக்கையை ஏற்று கோடம்பாக்கத்தில் புதிதாக அவருக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள ஸ்டுடியோவில் தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்களை சந்தித்துளளார் இசைஞானி இளையராஜா.
இசைஞானி இளையராஜாவை சந்தித்த பத்திரிகையாளர்கள் அவருக்கு வாழ்த்து மடல் மற்றும் மா,பலா,வாழை என மரக்கன்றுகளை அவருக்கு வழங்கி மகிழ்ந்தனர். பின்னர் சங்கத்தின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந் நிகழ்வில் மக்கள் தொடர்பாளர் டைமன்பாபுவும் கலந்து கொண்டார். பின்னர் இந்த சந்திப்பிற்கு ஏற்பாடு செய்த சங்கத்தின் நிர்வாகிகளுடன் பத்திரிகையாளர்கள் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.