“விசித்திரன்” திரை விமர்சனம் 4/5
நீண்ட நாட்களுக்குப் பிறகு குடும்ப உறவுகளின் உன்னதத்தை உணர்வுபூர்வமான முறையில் வெளிப்படுத்தி இருக்க கூடிய படம் விசித்திரன் .
இந்தப் படத்தின் கதாநாயகனாக ஆர்கே சுரேஷ் நடித்திருக்கிறார் மனைவி குழந்தை என இருவரும் இல்லாத வீட்டில் தனியாக வாழ பிடிக்காமல் முன்னாள் காவலர் மாயன் தனது நண்பர்களுடன் மது போதையுடன் வாழ்ந்து வருகிறார். அந்த சமயத்தில் ஒரு பங்களாவில் வயதான கணவன், மனைவி, கொலை செய்யப்படுகிறார்கள். அந்தக் கொலையை கண்டு பிடிக்க காவல்துறையினர் திணறி வருகிறார்கள். அப்போது உயர் அதிகாரியின் அழைப்பின் பேரில் , தனது நுட்பமான புத்தி கூர்மையால் கொலையாளியை கண்டுபிடித்து கொடுக்கும் காட்சியில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ஆர்கே சுரேஷ். கொலை வழக்கு விசாரணையின் போது, படித்து முடித்துவிட்டு கிராமத்தில் வசிக்கும் போது காதலித்த காதலியின் சடலத்தை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். அதன் பிறகு வீட்டிற்கு சென்று தனது மனைவியிடம் இருக்கும் நேரங்களில் ஒவ்வொரு நிமிடமும் தனது பழைய காதலியின் நினைவாகவே வாழ்ந்து வருகிறார். இதனால் கணவன் மனைவி உறவில் கொஞ்சம் கொஞ்சமாக விரிசல் ஏற்படுகிறது. அதன் பிறகு தனது மனைவி பிரிந்து சென்றுவிடுகிறார் சில வருடங்களுக்கு பிறகு வேறொரு கணவரை தேர்ந்தெடுத்து வாழ்ந்து வருகிறார்.
கொலை வழக்கு விசாரணையின் போது, படித்து முடித்துவிட்டு கிராமத்தில் வசிக்கும் போது காதலித்த காதலியின் சடலத்தை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். அதன் பிறகு வீட்டிற்கு சென்று தனது மனைவியிடம் இருக்கும் நேரங்களில் ஒவ்வொரு நிமிடமும் தனது பழைய காதலியின் நினைவாகவே வாழ்ந்து வருகிறார். இதனால் கணவன் மனைவி உறவில் கொஞ்சம் கொஞ்சமாக விரிசல் ஏற்படுகிறது. அதன் பிறகு தனது மனைவி பிரிந்து சென்றுவிடுகிறார் சில வருடங்களுக்கு பிறகு வேறொரு கணவரை தேர்ந்தெடுத்து வாழ்ந்து வருகிறார்.
அந்த சமயத்தில் திடீரென இவரது மனைவி விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். ஆர்கே சுரேஷ் மருத்துவமனையில் தனது மனைவியை பார்த்து துடிதுடித்து பழைய நினைவுகளை அசை போடும் காட்சிகள் படம் பார்க்கும் ஒவ்வொரு மனிதரையும் தனது குடும்ப உறவுகளை நினைவுபடுத்தும் விதமாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ஆர்கே சுரேஷ். இந்த படம் ஏற்கனவே மலையாளத்தில் ஜோசப் என்ற பெயரில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றிபெற்றது.
இன்றைய காலகட்டத்தில் எளியவர்களின் உயிரோடு விளையாடும் கார்பரேட் மருத்துவமனைகளில், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் நடைபெறும் முறைகேடுகளை வெளிக்கொண்டுவர போராடிவரும் ஆர் கே சுரேஷ் வெற்றி பெற்றாரா என்பது மீதிக்கதை.
தன்னிடம் இருந்து பிரிந்து சென்ற முன்னாள் மனைவி விபத்தில் இறந்துவிட அது விபத்தல்ல திட்டமிட்ட கொலை என்பதை கண்டுபிடிக்கும் மிரட்டலான ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியாக மிரட்டியிருக்கிறார் ஆர்கே சுரேஷ். ஆர்கே சுரேஷ் நடிப்பில் இதுவரை வெளிவந்த படங்களைவிட இந்த படம் ஆர்கே சுரேஷுக்கு மிகப்பெரிய ஸ்டார் அந்தஸ்தை கொடுக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
இந்த படத்தை இயக்குனர் பாலா தயாரிப்பில் பத்மகுமார் இயக்கியிருக்கிறார். ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.