“ஹவுஸ் மேட்ஸ்” படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு !

சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஹவுஸ் மேட்ஸ்’. ஆகஸ்ட் 1 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் இயக்குநர், கிரியேட்டிவ் புரொடியூசர் சக்திவேல் பேசுகையில், இதன் திரைக்கதையை படிப்பதற்கே சுவாரஸ்யமாக இருந்தது. வெவ்வேறு இடங்களில் டிராவல் ஆகிக் கொண்டே இருந்தது. அதை சரியாக படமாக்கிவிட முடியுமா என்ற கேள்வியும் இருந்தது. சவாலான இந்த விஷயத்தை செய்ய ஆர்ட் டைரைக்‌ஷன், இசை, ஸ்டண்ட் என அனைத்திலும் சரியாக இருக்க வேண்டும். அந்த குழு சரியாக வேலையும் பார்த்தார்கள். படம் முடிந்ததும் அதை பிசினஸ் செய்ய வேண்டும் என்றபோது, சிவகார்த்திகேயன் தரப்பிலிருந்து கால் வந்தது. அவர் படம் பார்த்துவிட்டு, ‘உங்கள் குழுவின் முயற்சிக்கு என்னால் ஆன சின்ன சப்போர்ட்’ என்று சொல்லிவிட்டு படத்தை வழங்குவதற்கு மிகவும் நன்றி. எனக்கு காளி வெங்கட்டை மிகவும் பிடிக்கும். அவருக்கும் தர்ஷன் பிரதருக்கும் மற்ற நடிகர்களுக்கும் நன்றி! பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் போல இந்த படத்திலும் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்றார்.

நடிகர் அப்துல் லீ பேசுகையில், நான் இதற்கு முன்பு நடித்த ‘கேப்டன் மில்லர்’, ‘இரும்புத்திரை’ போன்ற படங்களில் என்னுடைய கேரக்டர் சின்னதாக இருந்தாலும் கதையின் போக்கை மாற்றும்படி முக்கியமானதாக இருக்கும். அது போன்ற ஒரு கதாபாத்திரம் தான் ‘ஹவுஸ் மேட்ஸ்’ படத்திலும். பொதுவாக புதுமுக இயக்குநர்களுக்கும் எனக்கும் நல்ல ராசி இருக்கிறது. இந்த படம் நிறைய பேருக்கு முதல் படம். அனைவருக்கும் வாழ்த்துக்கள்! காளி வெங்கட் நான் நடிக்க நுழைந்த சமயத்தில் பெரிய இன்ஸ்பிரேஷன். தர்ஷனை எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடிக்கும். எனக்கு நல்ல கேரக்டர் கொடுத்த இயக்குநருக்கு நன்றி என்றார்.

நடிகை வினோதினி பேசுகையில், இந்த நல்ல படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரம் கொடுத்த இயக்குநருக்கு நன்றி. இந்தப் படம் நல்ல படம் என்பதை மிகவும் நம்பிக்கையாக என்னால் சொல்ல முடியும். சக்திவேல் கிரியேட்டிவ் புரொடியூசர் ஆக இந்த படத்தில் வேலை பார்த்திருக்கிறார். நல்ல படங்களில் எப்போதும் அவருடைய பங்கு இருக்கும். இந்த சின்ன படத்தில் சிவகார்த்திகேயன் உள்ளே நுழைந்ததும் பெரிய படமாக மாறிவிட்டது. அவருக்கும் நன்றி. தர்ஷன், காளி வெங்கட் இருவரின் வளர்ச்சியும் பிரம்மிக்க வைக்கிறது. படம் வெளியானதும் நிச்சயம் அனைவரின் நடிப்பும் பாராட்டப்படும் என்றார்.

பாடலாசிரியர் மோகன் ராஜன் பேசுகையில், ‘குடும்பஸ்தன்’, ”டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்திற்குப் பிறகு இந்தப் படம் நன்றாக வந்திருக்கிறது. இந்த வருடத்தில் எனக்கு அமைந்த மற்றொரு நல்ல படம். சிவகார்த்திகேயன், தர்ஷன், காளி வெங்கட் இவர்கள் அனைவருடனும் பணிபுரிந்தது மகிழ்ச்சி. நிச்சயம் ‘ஹவுஸ்மேட்ஸ்’ உங்களால் மறக்க முடியாத படமாக இருக்கும் என்றார்.

தயாரிப்பாளர் விஜய பிரகாஷ் பேசுகையில், ராஜவேலும் நானும் கல்லூரி காலத்தில் இருந்தே நண்பர்கள். அப்போது சண்டை போட்டதில்லை. ஆனால், படம் எடுக்கும்போது நிறைய சண்டை போட்டோம். சக்திவேல் உள்ளே வந்ததும் டீம் செட் ஆகி படம் விறுவிறுப்பாக நடந்தது. அதன் பிறகு சாந்தி டாக்கீஸ் அருண் பார்த்தார். பின்பு சிவகார்த்திகேயன் உள்ளே வந்தார். படத்திற்கு எல்லா விஷயங்களையும் பார்த்து செய்த சிவகார்த்திகேயன் & டீமுக்கு நன்றி என்றார்.

இயக்குநர் ரவிக்குமார் பேசுகையில், இந்தப் படத்தை பார்க்க SK நட்பு ரீதியில் அழைத்த போது சென்று பார்த்தேன். படம் பார்த்துவிட்டு வெளியில் வந்தபோது இயக்குநரிடம் வெற்றி படம் கொடுத்திருக்கிறீர்கள் என்று வாழ்த்தினேன். டிரெய்லரை விட படத்தில் நிறைய சர்ப்ரைஸ் இருக்கும். SK புரொடக்சன்ஸ் மூலமாக இந்தப் படத்தை வெளியிடுவது படக்குழுவினருக்கு எவ்வளவு சந்தோஷமான விஷயம் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றார்.

இயக்குநர் அஜய் ஞானமுத்து பேசுகையில், படம் பார்த்தது முடித்ததும் இயக்குநரை கட்டிப்பிடித்துக் கொண்டேன். வெற்றி படமாக இதைக் கொண்டு வந்திருக்கிறார்கள். படக்குழுவினர் அனைவரும் சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்துள்ளார்கள். நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். எஸ்கே புரொடக்க்ஷன் படத்தை வாங்கியுள்ளது என்பதே படத்தின் முதல் வெற்றி. படம் கண்டிப்பாக அடுத்த லெவல் சென்றிருக்கிறது என்றார்.

SK புரொடக்சன்ஸ், இணைத் தயாரிப்பாளர் கலை அரசு பேசுகையில், நல்ல கதை மற்றும் புது திறமையாளர்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நாங்கள் இயங்கி வருகிறோம். அந்த வகையில் ‘கனா’ படத்தில் இருந்து ஆரம்பித்து இப்போது ‘ஹவுஸ் மேட்ஸ்’ எட்டாவது படமாக வெளியிட இருக்கிறோம். ஃபேமிலி எண்டர்டெயினராக படம் உருவாகி இருக்கிறது. படம் வெளியானதற்கு பிறகு நிச்சயம் இயக்குநரின் வேலை பேசப்படும். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றார்.

நடிகை ஆர்ஷா பைஜூ பேசுகையில், தமிழில் இது என்னுடைய முதல் படம். என்னை நம்பி இந்த கதாபாத்திரம் கொடுத்த ராஜவேலுக்கு நன்றி. சிறப்பான குழுவோடு பணியாற்றி இருக்கிறேன். தர்ஷன் சிறந்த கோ- ஆக்டர். கடின உழைப்பாளி. காளி வெங்கட், வினோதினி போன்ற திறமை வாய்ந்த நடிகர்களுடன் நடித்தது மகிழ்ச்சி என்றார்.

இயக்குநர் ராஜவேல் பேசுகையில், இந்த படம் சாதாரணமாக தான் ஆரம்பித்தது. ஆனால், இவ்வளவு பெரிய மேடை இந்த படத்திற்கு அமைந்தது சிவகார்த்திகேயன் புரொடக்ஷன் தான். முதல் படம் எடுப்பது சவாலான விஷயம். எடுத்த படத்தை வெளியிடுவது இன்னும் சவாலானது. அதை SK புரொடக்க்ஷன் எளிமையாக செய்து கொடுத்தது. சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி. இயக்குநர் அஜய் ஞானமுத்துவிடம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். நான் கஷ்டப்பட்ட சமயத்தில், கூட இருந்த விஜய்க்கு நன்றி. தர்ஷன், காளி வெங்கட், வினோதினி மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. படத்தில் நிறைய சின்ன சின்ன சர்ப்ரைஸ் இருக்கிறது. தியேட்டரில் படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள் என்றார்.

நடிகர் காளி வெங்கட் பேசுகையில், எனக்கு மட்டுமல்ல, பார்வையாளர்களுக்கும் இது முக்கியமான படமாக இருக்கும். என்னை நம்பி இந்தக் கதாபாத்திரம் கொடுத்த இயக்குநருக்கு நன்றி. படம் பார்த்துவிட்டு வாழ்த்திய சிவகார்த்திகேயன், கலை மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. படத்தில் நிறைய சர்ப்ரைஸ் இருக்கு என்றார்.

நடிகர் தர்ஷன் பேசுகையில், இதுபோன்ற கதையில் நடிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. அது ‘ஹவுஸ் மேட்ஸ்’ படத்தில் அமைந்திருக்கிறது. என்னை நம்பி இந்த கதாபாத்திரம் கொடுத்த இயக்குநருக்கு நன்றி. படக்குழுவினர் அனைவரும் கடினமாக உழைத்துள்ளனர். படத்தின் ஐடியா, திரைக்கதை இதெல்லாம் சிவகார்த்திகேயன் அண்ணாவுக்கு மிகவும் பிடித்தது. படத்தை பிரசண்ட் செய்ய ஒத்துக்கொண்டதற்கு அண்ணாவுக்கு நன்றி. டிரெய்லர் பார்த்துவிட்டு நிறைய பேர் ஹாரர் படமா என்று கேட்டார்கள். அதையும் தாண்டி எங்கேஜிங்கான திரைக்கதையும் ஆச்சரியங்களும் கொண்ட ஃபேமிலி எண்டர்டெயின்மெண்ட் படம் இது. காளி வெங்கட் அண்ணாவுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம் என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button