ரசிகர்களின் வரவேற்பை பெற்ற “இடிமுழக்கம்” ஃப்ரீ-லுக் போஸ்டர்
இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் GV.பிரகாஷ் குமார் மற்றும் காயத்திரி முக்கிய வேடங்களில் நடிப்பில், உருவாகி வரும் ‘இடிமுழக்கம்’ திரைப்படம் துவங்கப்பட்ட தருணத்திலிருந்தே ரசிகர்களிடம் பெரும் ஆவலை ஏற்படுத்தி வருகிறது. இந்தப் படத்தை ஸ்கைமேன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் கலைமகன் முபாரக் தயாரித்துள்ளார். மிகச் சரியான விளம்பரங்கள் மூலமாகவும், கடின உழைப்பின் மூலமாகவும் தனது தயாரிப்புகளில் வெளியாகும் எல்லா படங்களிலும், வெற்றியை பெரும் கலைமகன் முபாரக் போன்ற ஒரு தயாரிப்பாளருடன், விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட, யதார்த்தம் மற்றும் உணர்ச்சிமிக்க கதைகளை தரும் இயக்குநர் சீனு ராமசாமி இணைய, இளைஞர்களின் செல்லப்பிள்ளை GV.பிரகாஷின் நடிப்பில் உருவாக்கியுள்ள “இடிமுழக்கம்” திரைப்படம் ரிலீஸுக்கு முன்னரே பிரமாண்டமான வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் முன் வெளியான ப்ரீ-லுக் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. வழக்கமாக, ஏ-லீக் நட்சத்திரங்கள் மட்டுமே தங்கள் படங்களில் இந்த பாக்கியத்தை அனுபவிக்கிறார்கள், ஆனால் இப்போது, GV.பிரகாஷ் பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்களிடமிருந்து இந்த அன்பையும் மரியாதையையும் பெற்றிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. தனித்துவமான கதைக்கரு மூலமாக தொடர்ந்து வணிகரீதியிலான வெற்றி திரைப்படங்களை அவர் கொடுத்து வருவதால், அவர் திரைத்துறையில் பெரும் உயரத்தை எட்டியுள்ளார். இந்தத் திரைப்படத்தின் முதல் பார்வை பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. தனித்துவமான கதைக்கருவை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள தோற்றத்தை தரும் இப்படத்தை பார்வையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.