ஜாலி ஓ ஜிம்கானா நிகழ்ச்சியில் வடசென்னை_2 படத்தின் அப்டேட்ஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ் !

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு முக்கிய தருணமாக இருக்கும் ‘வடசென்னை 2 ‘ படம் குறித்த ஒரு புதிய தகவலை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ‘ஜாலி ஓ ஜிம்கானா’ நிகழ்ச்சியில் அதிகாரபூர்வமாக பகிர்ந்துள்ளார். இது தொடர்பான நிகழ்ச்சி மே ஏழாம் தேதி சன் நெக்ஸ்ட் (SUN NXT) டிஜிட்டல் தளத்தில் பிரத்யேகமாக ஒளிபரப்பானது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் குறித்து தொடர்ச்சியான யூகங்கள் நிலவி வரும் நிலையில்… தொகுப்பாளர் ஜெகன் கிருஷ்ணனுடனான ஒரு வெளிப்படையான மற்றும் தணிக்கையற்ற உரையாடலில்.. ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து கொண்டிருந்த கேள்விக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் இறுதியாக பதிலளித்து, இப்படம் குறித்த தெளிவையும், புதிய உற்சாகத்தையும் ஏற்படுத்தி உள்ளார்.

இந்த பரபரப்பான அறிவிப்பை கடந்து இந்த நிகழ்ச்சி ஐஸ்வர்யா ராஜேஷின் திரையுலக பயணத்தை பற்றிய ஒரு அரிதான பார்வையையும் வழங்குகிறது. இதில் உள்ள கதைகள் ஆச்சரியமூட்டுவதாகவும், அதே சமயத்தில் சுவாரசியமானதாகவும் இருக்கின்றன. வடசென்னை படத்திற்காக இயக்குநர் வெற்றிமாறனுடன் ‘ஆடிஷன் ‘ செய்ததை அவர் நினைவு கூர்ந்தார். அதில் இரண்டு முழு நிமிடங்களுக்கு தடையின்றி கெட்ட வார்த்தையை பேசும் படி அவரிடம் கேட்கப்பட்டது. இது ஒரு அசாதாரணமான பணி என்றாலும்.. அவர் தயக்கமின்றி அதை ஏற்றுக் கொண்டு, மனதில் நீடித்த ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினார்.

இந்த உரையாடல் பிரத்யேகமானதாகவும் மாறுகிறது. ஐஸ்வர்யா தனது கல்லூரி கால நினைவை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டிருக்கிறார். பல வருடங்கள் பெண்கள் மட்டும் படிக்கும் கல்லூரிகளில் படித்த பிறகு அந்த சூழலுக்கு அப்பாற்பட்ட வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையால் உந்தப்பட்டு.. தொடர்ந்து பத்து நாட்கள் வகுப்புகளை தவிர்த்து இருக்கிறார். அந்தத் தருணம் நேர்மையுடனும், நகைச்சுவையுடனும் வெளிப்பட்டு பார்வையாளர்களின் மனதை தொடுகிறது.

ஜெகன் கிருஷ்ணனின் எளிமையான மற்றும் ஈர்க்கும் பாணியால் வழிநடத்தப்பட்டு, ‘ஆஃபீஸ் கானா’ இசை குழுவின் ஆற்றல் மிக்க பங்களிப்பால் மெருகேற்றப்பட்ட இந்த எபிசோட்.. புதிய தகவல்களையும், பொழுதுபோக்கையும் தடையின்றி ஒன்றிணைக்கிறது.

இந்த கொண்டாட்டம் ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் நின்று விடவில்லை. ஜாலி ஓ ஜிம்கானா நிகழ்ச்சியில் அடுத்தடுத்து வருபவர்கள், துருவ் விக்ரம், ரவி மோகன், மிர்ச்சி சிவா, பிரேம்ஜி அமரன், ஹரிஷ் கல்யாண், மகத் ராகவேந்திரா, வைபவ் ரெட்டி, அஸ்வின் காகுமனு மற்றும் அனைவரின் விருப்பத்திற்குரிய டிஜிட்டல் திரை இரட்டையர்களான கோபி- சுதாகர் என பட்டியல் நீள்கிறது.

ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஒரு புதிய விருந்தினர்… ஒரு புதிய கதை … முற்றிலும் தவற விட கூடாத நிகழ்ச்சி ஜாலி ஓ ஜிம்கானா..!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button