மண்ணில் புதைந்த மர்மங்களை வெளிப்படுத்தும் நாட்டார் மர்மகதை !

GENTLEWOMAN படத்தை தயாரித்த “கோமளா ஹரி பிக்சர்ஸ்” பட நிறுவனம் சார்பில் கோமளா ஹரிபாஸ்கரன் தனது நான்காவது படைப்பாக
ஒரு கதையை பிரமாண்டமாக தயாரிக்கிறார். புரொடக்ஷன்-4 படமான இதற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.
சமூகத்தின் நீண்டகால கலாச்சாரம், பண்பாடு மற்றும் மரபுகளை வெளிப்படுத்தும் மண்ணில் புதைந்த பழைய கலை வடிவங்களையும், பழமை கதையின் பதிவாக இருக்கும் விதமாக இப்பட கதை உருவாகி இருக்கிறது. 1980-களின் மத்தியில், தென் மாவட்டங்களில் ரத்தமும் சதையுமாய் அரங்கேறிய ‘அமானுஷ்யம்’ சார்ந்த உண்மைக் கதை என்பது, இப்படத்தில் பிரமாண்ட கதையாக மாற்றியுள்ளது.

மண் சார்ந்த படைப்பான “விழா” படத்தை இயக்கி, அனைவர் பாராட்டையும் பெற்ற பாரதி பாலகுமாரன் இப்படத்தை வடிவமைத்து இயக்குகிறார். இந்த கதையை எடுப்பதென்று முடிவு செய்த பின்பு, உண்மைக்கு நெருக்கமான பல வழிகளில் ஆராய்ந்து கதை அமைத்து, திரைக்கதையை எழுதியுள்ளார்.

இதில், நாயகனாக விஷ்வா நடிக்கிறார். தன் தலைமுறையின் தீரா சாபத்திலிருந்த தனது குடும்பத்தை மீட்க போராடும் ஒரு இளஞனாக விஷ்வா நடிக்கிறார். இவர், ‘சாம்பியன்’ படம் மூலம் அறிமுகமானவர். இதற்காக, ஆறு மாதம் கடும் பயிற்சி எடுத்து கதை நாயகனாக தன்னை தயார் செய்து வருகிறார்.

இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் பெரிய நடிகர் ஒருவர் நடிக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. மேலும், மைம் கோபி, ஆடுகளம் நரேன், ரிஷா ஜாக்கோப்ஸ், முனிஷ்காந்த், அனுபமா குமார், பாபா பாஸ்கர், ரெம்யா சுரேஷ் மற்றும் பல நடிகர், நடிகை தேர்வு நடைபெற்று வருகிறது.
இதன் படபிடிப்பு இம்மாதம் 22ம் தேதி முதல் தொடர்ந்து 40 நாள்கள் நடை பெறுகிறது. சென்னையிலும் சில காட்சிகள் நடைபெறும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.



