பிரபுதேவா, வடிவேலு நடித்துள்ள பேங் பேங் படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

KRG கண்ணன் ரவியின் பிரமாண்ட தயாரிப்பில், தீபக் ரவி இணைத் தயாரிப்பில் உருவாகி வரும் “பேங் பேங்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. நடனப்புயல் பிரபு தேவா மற்றும் வைகைப் புயல் வடிவேலு 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ள இந்த திரைப்படம், ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வித்தியாசமான ஜோம்பி வகை ஜானரில் உருவாகி வரும் இப்படம், ஆக்ஷன், காமெடி மற்றும் ஹாரர் அம்சங்கள் கலந்த முழுமையான கமர்ஷியல் என்டர்டெய்னராக உருவாகி வருகிறது. பிரபு தேவாவின் ஸ்டைலும் , வடிவேலுவின் தனித்துவமான நகைச்சுவையும் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை அளிக்கவுள்ளது.

மலேசியாவில் 10 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. பிரமாண்ட காட்சிகள் படத்தின் முக்கிய ஹைலைட்டாக அமையும் என படக்குழு தெரிவித்துள்ளது.

முன்னதாக வெளியான டைட்டில் டீஸர் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருந்தது. அந்த டீஸரில் ஜோம்பிகளால் சூழப்பட்ட சூழலில் பிரபு தேவா மற்றும் வடிவேலு துப்பாக்கியுடன் மாஸாக தோன்றிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. “பிரபு  வேலு”, “வடி தேவா” போன்ற நகைச்சுவை கலந்த பெயர்கள் ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டியது.

இப்படத்தினை இயக்குநர் சாம் ரோட்ரிகஸ் (Sam Rodrigues) எழுதி இயக்குகிறார். ஹாரர் அட்வென்ச்சர் பாணியில் உருவாகும் இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

நடிகர் பப்லு பிரித்திவிராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம், KRG நிறுவனத்தின் நான்காவது பிரமாண்ட தயாரிப்பாக உருவாகி வருகிறது. இந்தோனேசியாவின் Mount Bromo எரிமலை பகுதியில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்த நிலையில், விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

“பேங் பேங்” திரைப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button