“பாதாம்கீர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

லார்ட்ஸ் பி தி இன்டர்நேஷனல் புரொடக்ஷன்ஸ் (LORDS P The international Production) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெய் சக்தி பிரகாஷ் இயக்கத்தில், உருவாகி வரும் ரொமான்ஸ் காமெடி திரைப்படமான ‘பாதாம்கீர்’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை முன்னணி நடிகர் கௌதம் கார்த்திக் தனது சமூக வலைத்தள பக்கங்கள் வழியாக வெளியிட்டுள்ளார். போஸ்டர் வெளியாகியதுடன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
வண்ணக்கலவை நிறைந்த பின்னணியில், கையில் இசை வாத்தியங்களுடன் நடிகர்கள் சிவகுமார், சதீஷ் மற்றும் டேனியல் ஆன்னி போப் ஆகியோர் கையில் இசை வாத்தியங்களுடன் தோன்றும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ள ஃபர்ஸ்ட் லுக், பார்ப்பவர்களின் முகத்தில் இயல்பாக புன்னகையை வரவழைக்கிறது. கலர்ஃபுல் மற்றும் ஜாலியான டிசைனில் உருவாக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர், படம் முழுக்க முழுக்க குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய ரொமான்ஸ் காமெடி என்டர்டெய்னராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தில் சிவகுமார் மற்றும் ஆன் ஷீத்தல் நாயகன், நாயகியாக நடிக்கின்றனர். இவர்களுடன் சதீஷ், டேனியல் ஆன்னி போப், பிரதீப் ஜோஷ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர். மேலும் யோகிபாபு மற்றும் TM கார்த்திக் முக்கியமான கேமியோ கதாப்பாத்திரங்களில் தோன்றுகின்றனர். மதுமிதா, பிரதீப் ஜோஷ், வழக்கு எண் முத்துராமன் மற்றும் லிஜா உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
சென்னை, பாண்டிச்சேரி மற்றும் மூணாறு உள்ளிட்ட பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. தற்போது இறுதிக்கட்ட பின்னணி பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் டீசர் மற்றும் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



