வித்தியாசமான கதை களத்தில் உருவாகிவரும் “கொம்பா” திரைப்படம்

கோல்டன் ஆரோ புரொடக்சன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் சண்முகசுந்தரம் தயாரித்துள்ள படத்திற்கு “கொம்பா” என்று வித்யாசமாக பெயரிட்டுள்ளனர்.
பக்கி பயலுக படத்தை இயக்கிய ராஜ பாரதி இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல் எழுதி இயக்கி கதாநாயகனாக களமிரங்குகிறார். கதாநாயகியாக நிஷா இஸ்மத் நடித்துள்ளார். மற்றும் சிங்கம் புலி, பருத்திவீரன் சரவணன், சரண்ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். காந்தாரா படத்தில் நடித்த பிரபல கன்னட நடிகரான உக்ரம் ரவி இந்த படத்தின் வில்லனாக நடித்துள்ளார்.

படம் பற்றி இயக்குனரும், கதாநாயகனுமான ராஜ பாரதி பேசுகையில், இது ஒரு வித்தியாசமான சென்டிமெண்ட் கலந்த அக்ஷன் திரில்லர் படம். இன்றைய இளைய தலைமுறையினர் பல்வேறு வகையான போதை பழக்கங்களுக்கு அடிமையாகி வருகிறார்கள்.

வெளிநாடுகளில் இருந்து விதவிதமாக இறக்கப்படும் போதை பொருட்களால் நம் இளைஞர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் அவரை சார்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் இந்த போதை கலாச்சாரத்தை எப்படி ஒழிப்பது என்பதை மையமாக வைத்து இந்த படத்தை பான் இந்தியா படமாக உருவாக்கியிருக்கிறேன். அப்பா மகன் சென்டிமென்ட் கலந்து இன்றைய சமூகத்திற்கு தேவையான மிக முக்கியமான கருத்தை சொல்லுகிற படமாக இது இருக்கும்.

படப்பிடிப்பு சேலம், ஏற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்றார் இயக்குனர் ராஜபாரதி.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button