நடிகர் நானியின் மாறுபட்ட தோற்றத்தில் உருவாகும் “தசரா” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

நடிகர் நானி நடிப்பில், முதல் பான் இந்திய திரைப்படமாக உருவாகிறது  ‘தசரா’ திரைப்படம். ஶ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்  சுதாகர் செருகுரி இப்படத்தை தயாரிக்கிறார். அறிமுக இயக்குநர் ஶ்ரீகாந்த ஒதெலா இயக்குகிறார்.

நேச்சுரல் ஸ்டார்  நானி, தனது வழக்கமான பாணியிலிருந்து நவ நாகரீக தோற்றத்திலிருந்தும் முற்றிலுமாக மாறி முதல் முறையாக  முழுக்க முழுக்க  மாறி, ஒரு கிராமிய கேரக்டரில் கரடுமுரடான தோற்றத்தில் நடிக்கிறார். இந்த கேரக்டரில் நடிப்பதற்காக  அவர்  நிறைய பயிற்சி எடுத்து தன்னை முழுமையாக கிராமத்து மனிதனாக  மாற்றிக் கொண்டுள்ளார்.  இப்படத்தின் அறிவிப்பு வீடியோவில் அவரது தெலுங்கானா பேச்சு வழக்கு மொழி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தது. படம் முழுக்க அவர் மாஸ் டயலாக்குகளைப் பேசுவதைப் பார்ப்பதே ஒரு விருந்தாக இருக்கும். ஸ்பார்க் ஆஃப் தசரா க்ளிம்ப்ஸுக்கும் ரசிகர்களிடையே  அமோக வரவேற்பு கிடைத்தது குறிப்பிடதக்கது.

தயாரிப்பாளர்கள், ரசிகர்களின் ஆர்வத்தை கூட்டும் விதமாக தற்போது ஒரு பெரிய அறிவிப்பை தந்துள்ளனர். ஸ்ரீராம நவமி கொண்டாட்ட வெளியீடாக, 4 நாட்கள் நீண்ட வார விடுமுறையை ஒட்டி “தசரா” திரைப்படம் 30 மார்ச் 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.  எல்லா மொழிகளிலும் படம் வெளியாவதற்கு இது சரியான தேதியாக இருக்கும்.

பட வெளியீடு குறித்த அறிவிப்பு போஸ்டரில் நாயகன்  தூசி படிந்த கைலி சட்டையுடன் நானி அதிரடியான கிராமத்து லுக்கில் அசத்தலாக இருக்கிறார். அவரது ஹேர் ஸ்டைலும், கையில் இருக்கும் மதுபான பாட்டில்களும் அவரது முரட்டுத்தனத்தைக் கூட்டி அவரது கதாப்பாத்திரத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. பின்னணியில், நகங்களைக் கடிக்கும் சில்க் ஸ்மிதாவின் உருவப்படத்தையும் நாம் போஸ்டரில் காணலாம்.

இப்படத்தின் படப்பிடிப்பு  ஹைதராபாத்தில் மீண்டும் தொடங்கியுள்ளது. படத்தின் முன்னணி நடிகர்கள் அனைவரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்கள். இப்படத்தில் நானிக்கு ஜோடியாக தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார்.

படத்தின் கதை பெத்தபள்ளி மாவட்டத்தில் உள்ள கோதாவரிகானியில் (தெலுங்கானா) சிங்கரேணி நிலக்கரி சுரங்கத்தில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் நடப்பதாக  அமைக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக இப்படத்தில் இதுவரையிலும் பார்த்திராத புதுமையான பார்த்திரத்தில்  நானி நடிக்கிறார்.

“தசரா” திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button