தலைவனின் நேர்மை, தொண்டனின் விசுவாசம் பற்றிய கதைக்களத்தில் உருவாகும் “கட்சிக்காரன்”
திரையுலகில் அரசியல் சார்ந்த படங்கள் எத்தனையோ வந்துள்ளன. ஓர் அரசியல் கட்சித் தலைவனுக்கும் தொண்டனுக்கும் உள்ள தொடர்பு பற்றியும் உறவைப் பற்றியும் புது விதத்தில் கூறுகிற படமாக ‘கட்சிக்காரன்’ உருவாகி உள்ளது. அரசியல் கட்சித் தலைவருக்கும் தொண்டனுக்கும் இடையில் நடக்கும் போராட்டம் தான் கதை. ஒரு தலைவன் எப்படி நேர்மையாக இருக்க வேண்டும் ஒரு தொண்டன் எப்படி விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றி இப்படம் அலசுகிறது. முழுக்க முழுக்க அரசியலை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி உள்ளது.
இப்படத்தை பி.எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் மற்றும் இணை தயாரிப்பு புளூஹில்ஸ் புரொடக்ஷன், சார்பில் தயாரித்துள்ளனர். இதில் தோனி கபடிகுழு, வேட்டைநாய் , படங்களில் நடித்த விஜித் சரவணன். இப்படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார். ஸ்வேதா டாரதி கதாநாயகியாக நடிக்க. ”காதல் முன்னேற்ற கழகம்’ படத்தில் வில்லனாக நடித்த சிவசேனாதிபதி கட்சிக்காரன் படத்தில் அரசியல் தலைவர் நடித்து உள்ளார்… காமெடியனாக AR தெனாலியும் நடித்திருக்கிறார்கள்.
‘கட்சிக்காரன் ‘ படப்பிடிப்பு உளுந்தூர்பேட்டை,துருகம், கள்ளக்குறிச்சி போன்ற இடங்களில் நடந்துள்ளது. சரியாக திட்டமிடப்பட்டு 40 நாட்களில் முழுப்படத்தையும் முடித்துள்ளார்கள். விரைவில் ‘கட்சிக்காரன்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.