நடன இயக்குனர் பிருந்தா இயக்கத்தில் உருவான “தக்ஸ்” படத்தின் டீஸர் வெளியீடு

HR பிக்சர்ஸ் சார்பில் ரியா சிபு  தயாரிப்பில், நடன இயக்குனர் பிருந்தா இயக்கத்தில், ஹிருது ஹரூன், சிம்ஹா, ஆர் கே சுரேஷ், முனிஸ் காந்த் ஆகியோர் நடித்துள்ள ‘தக்ஸ்’ திரைப்படத்தின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீட்டு விழா, சமீபத்தில் திரையுலக பிரபலங்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் ஆர்யா, இயக்குனர்கள் கே.பாக்யராஜ், கௌதம் வாசுதேவ் மேனன்,  பார்த்திபன், தேசிங்கு பெரியசாமி, ரவி அரசு, நடிகை குஷ்பூ, பூர்ணிமா பாக்யராஜ், கலா மாஸ்டர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இவ்விழாவில்…. நடிகர் ஆர்யா பேசுகையில்.., “பிருந்தா மாஸ்டர் உடன் பல படங்கள் பணிபுரிந்துள்ளேன். அவருடைய நிஜ கதாபாத்திரம் ஆக்‌ஷனோடு தான் இருக்கும். அது இந்த படத்தில் பிரதிபலித்து இருக்கிறது. பவர்புல்லான ஆக்‌ஷன் காட்சிகள் படத்தில் இருக்கிறது. படத்தின் டீசரில் ஆக்சன் காட்சிகள் சிறப்பாக இருக்கிறது. தயாரிப்பாளர் சிபு, எல்லாவற்றிலும் தனித்துவத்தை எதிர்பார்க்கும் ஒருவர், இந்தப் படம் அவர் நினைத்தது போல் இருக்கும் என்றார்.

இயக்குனர் கௌதம் மேனன் பேசுகையில்.., என்னுடைய அனைத்து படங்களிலும் பாடல்கள் சிறப்பாக வர பிருந்தாவும் ஒரு காரணம். வேட்டையாடு விளையாடு படத்தில் கற்க கற்க பாடலில் வரும் ஆக்‌ஷன் பகுதிகளை அவர் தான் இயக்கினார். அதனால் அவர் ஆக்‌ஷன் திரைப்படத்தை உருவாக்குகிறார் என்பதில் எனக்கு எந்த ஆச்சர்யமும் இல்லை, அவர் கண்டிப்பாக பெரிய இடத்தை தொடுவார் என்றார்.

இயக்குனர் பார்த்திபன்   பேசுகையில்.., ஒரு டீசர் மூலமாக கதாபாத்திரத்தை வெளிக்காட்டியது படத்தை பார்க்க வைக்கும் ஆவலை தூண்டுகிறது. பிருந்தா மாஸ்டருடன் பணிபுரிய எனக்கு பயமாக இருக்கும். வெவ்வேறு வகையான கதைகளத்தை இயக்குனர் பிருந்தா தேர்ந்தெடுத்து இருப்பது ஆச்சரியத்தை தருகிறது. நடிகர்கள் அனைவரும் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர். இந்த படத்தில் பங்குபெற்ற அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் என்றார்.

நடிகை குஷ்பூ கூறியதாவது..,
“ பிருந்தாவால் கண்டிப்பாக ஆக்‌ஷன் காட்சிகளை சுலபமாக எடுக்க முடியும், அவர் அதற்காகவே பழக்கப்பட்டவர். பிருந்தா மாஸ்டர் தான் உண்மையான தக். பிருந்தா சிறப்பானதை தவிர வேறு எதையும் கொடுக்க மாட்டார். ஒரு பெண் இயக்குனரால் இப்படி ஒரு படத்தை கொடுக்க முடியுமா என்ற பேச்சை அவர் உருவாக்குவார் என்றார்.

இயக்குனர் கே.பாக்யராஜ் பேசுகையில் .. படத்தின் டீசரில் ஆக்‌ஷன் திரைப்படத்திற்கு உன்டான அனைத்து அம்சங்களும் இருக்கிறது. இந்த திரைப்படம் குண்டர்கள் எனப்படும் ரவுடிகளை பற்றிய கதை என்று தான் தெரிகிறது. பிருந்தா மாஸ்டரின் முதல் படம் காதல் படமாக இருந்தது, இப்போது அவரது இரண்டாவது படம்  அதற்கு நேர் எதிராக ஆக்‌ஷன் படமாக இருக்கிறது. இது அவர் பல வகையான திரைப்படங்களை எடுக்க விரும்புகிறார் என்று காட்டுகிறது. படத்தின் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் கடின உழைப்பை கொடுத்துள்ளனர். டீசர் பார்க்கும் போது படம் பார்க்க வேண்டும் என்ற ஆவல் வருகிறது. இந்த படத்தின் வெற்றிவிழாவில் சந்திக்கலாம் என்றார்.

நடிகர் ஆர் கே சுரேஷ் பேசுகையில்… தயாரிப்பாளர் சிபுவிற்கு எனது நன்றிகள், அவர் எல்லாவற்றிலும் அதிகமாக உழைப்பை தரும் ஒருத்தர். படத்தின் ஹீரோ ஹிருது, குமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நபர் போல மாறி, படப்பிடிப்பு தளத்திற்கு வந்தார், அவருடைய அர்ப்பணிப்பு அவருக்கு பல வெற்றிகளை கொடுக்கும். இயக்குனர் பிருந்தா கடின உழைப்பை கொடுக்க கூடியவர், அவரது வேகம் எல்லோரையும் ஊக்கப்படுத்தும். இந்த திரைப்படம் ஒரு வித்தியாசமான கதைக்களமாக இருக்கும். என்னுடன் இந்த திரைப்படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களுக்கும் எனது நன்றிகளும், வாழ்த்துக்களும் தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

இந்த சிறப்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்த கெளரவ விருந்தினர்கள், இயக்குனர் பிருந்தா, நடிகர் ஹிருது ஹரூன், “தக்ஸ்” படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு இந்த திரைப்படம் வெற்றியடைய வாழ்த்தினார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button