“மஞ்சக் குருவி” படத்தின் இசை வெளியீட்டு விழா
வி.ஆர். கம்பைன்ஸ் நிறுவனத்தின் சார்பில் விமலா ராஜநாயகம் தயாரிப்பில், அரங்கன் சின்னத்தம்பி இயக்கத்தில் உருவாகியுள்ள “மஞ்சக்குருவி” படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குனர்கள் பேரரசு, ரவி மரியா, பிஆர்ஓ விஜய் முரளி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் இயக்குனர் அரங்கன் சின்னத்தம்பி பேசுகையில்… பாசமலர், கிழக்கு சீமையிலே படங்களுக்கு பிறகு, அண்ணன், தங்கை பாசத்தை உயிரோட்டமாக காட்டும் படம் “மஞ்சக்குருவி” என்றார்.
அண்ணனாக கிஷோர் நடிக்க, தங்கையாக நீரஜா நடித்துள்ளார். சௌந்தர்யன் இசையில், தங்கையை நினைத்து, அண்ணன் பாடும் பாடல், கல் நெஞ்சையும் உருக வைக்கும். ‘கூட பொறந்த பொறப்பே’… என தொடங்கும் அந்தப் பாடலை, சொளந்தர்யனே தனது வசீகர குரலில் பாடியுள்ளார்.
இந்தப் படத்தில் வில்லனாக ‘குங்ஃபூ மாஸ்டர்’ ராஜநாயகம் நடித்துள்ளார். விஷ்வா, நீரஜா, கஞ்சா கருப்பு, சாரப்பாம்பு சுப்புராஜ், சூப்பர் குட் சுப்பிரமணி, கோலிசோடா பாண்டி, சுஜாதா மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்ததும் “மஞ்சக் குருவி” விரைவில் திரைக்கு வர இருக்கிறது