3டி தொழில்நுட்பத்தில் பிரமாண்டமாக காட்சியளிக்கும் “ஆதி புருஷ்” படத்தின் டீஸர்
இந்திய திரையுலக வரலாற்றில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டீசர்களில் ‘ஆதி புருஷ்’ பட டீசர் ஒன்று. ராமாயண காவியத்தின் நவீன கால பதிப்பைத் தழுவி, முன்னணி நட்சத்திர நடிகர்களின் பங்களிப்புடன், ‘ஆதி புருஷ்’ தயாராகி இருக்கிறது.
உலகின் புனிதமான நகரங்களில் ஒன்றான அயோத்தியின் சரயு நதிக்கரையில் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட மேடையில், ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரம்மாண்டமான டீசர் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் நடிகர்கள் பிரபாஸ், கீர்த்தி சனோன், இயக்குநர் ஓம் ராவத், தயாரிப்பாளர் பூஷன் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
‘ஆதி புருஷ்’ படத்தின் தயாரிப்பாளர்கள் அயோத்தியாவில் பிரம்மாண்டமான நிகழ்ச்சி மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடிய ஒரு தொடக்கத்தை ஆரம்பித்துள்ளனர். பல ஆண்டுகளாக அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலிருந்து தயாராகும் சர்வதேச தரத்திற்கு இணையான படைப்புகளைப் போல், நம்மாலும் உருவாக்க இயலும் என்பதை இந்த படத்தின் டீசர் நிரூபித்திருக்கிறது. ‘ஆதி புருஷ்’ படத்தின் கதைக்களம், நடிகர்களின் பங்களிப்பு … என அனைத்தும் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது.
பிரபாஸ் நடிக்கும் ‘ஆதி புருஷ்’ படத்தை டி சீரிஸ் நிறுவனத்தின் பூஷன் குமார், கிரிஷன் குமார், ஓம் ராவத், பிரசாத் சுதார், ரெட்ரோ ஃபைல்ஸ் நிறுவனத்தின் ராஜேஷ் நாயர் ஆகியோர் ஏராளமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி வெளியாகிறது.