மதுவுக்கு எதிரான கதைக்களத்தில் “மாவீரன் பிள்ளை” எச். ராஜா பாராட்டு !
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி சிலர் நீண்ட காலமாக போராடி வருகின்றனர். இந்நிலையில் மதுவுக்கு எதிரான கதையம்சம் உள்ள திரைப்படத்தை இயக்குனர் ராஜா இயக்கத்தில் வெளிவர இருக்கும் நிலையில், முக்கியப் பிரமுகர்களுக்கு சிறப்புக் காட்சி ஒளிபரப்பப்பட்டது. இப்படத்தை பாஜகவின் மூத்த தலைவர் எச். ராஜா, நடிகர் ராதாரவி, இயக்குனர்கள் மோகன் ஜி, கணேஷ் பாபு, ஆகியோர் பார்த்தனர்.
படத்தைப் பார்த்த பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த எச். ராஜா தமிழகத்தில் திமுக ஆட்சியில் கலைஞர் தான் மதுவை அறிமுகப்படுத்தினார் என்றார்.
தொடர்ந்து பேசுகையில்.. ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது மதுவுக்கு எதிராக போராடினார் ஆனால் தற்போது அவர் அரசியல் மதுவுக்காக டார்கெட் நிர்ணயித்து விற்பனை செய்ய சொல்லி விற்பனை செய்பவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி வருகிறார்.
இயக்குனர் ராஜா மதுவிற்கு எதிராக ஒரு நல்ல படம் தந்துள்ளார்.. இது போன்ற படங்கள் அதிகப்படியாக வரவேண்டும் இன்று தமிழ்நாட்டில் ஏராளமான இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகி உள்ளார்கள் இந்த நிலை மாற இப்படியான பல பாடங்கள் வர வேண்டும் என்று படத்தின் இயக்குனரையும் படக்குழுவினரையும் பாராட்டி பேசினார்