பவன் கல்யாண் நடிக்கும் “உஸ்தாத் பகத் சிங்” படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்
பவர் ஸ்டார் பவன் கல்யாண் மற்றும் ஹரிஷ் ஷங்கரின் வெற்றிகரமான கூட்டணியில், உஸ்தாத் பகத் சிங் திரைப்படம், மக்களை மகிழ்விக்கும் மிகப்பெரிய மாஸ் ஆக்ஷன் என்டர்டெய்னராக இருக்கும்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் பேனரின் கீழ் நவீன் யெர்னேனி மற்றும் Y ரவிசங்கர் ஆகியோர் பிரமாண்டமாக தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகன் பயன்படுத்தும் அனைத்து ஆயுதங்களையும் வெளிப்படுத்தும் ஒரு அதிரடியான போஸ்டரை இயக்குநர் ஹரிஷ் ஷங்கர் ரசிகர்களுக்காக பிரத்யேகமாக பகிர்ந்துள்ளார்.
பவன் கல்யாண் இன்று படப்பிடிப்பில் கலந்துகொண்ட நிலையில், படத்தின் மிகப்பெரிய ஆக்ஷன் காட்சியின் படப்பிடிப்பு, விழாவுடன் இனிதே துவங்கியது. இந்த விழாவில், தயாரிப்பாளர்கள் ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டனர். இந்த போஸ்டரில் பவன் கல்யாண் அவருக்கே உரித்தான ஸ்டைலுடன் கலக்கலாக காக்கி உடையில் மிளிர்கிறார். தயாரிப்பு வடிவமைப்பாளர் ஆனந்த் சாய் மற்றும் குழுவினர் இந்த ஷெட்யூலுக்காக பிரமாண்டமான செட்டை அமைத்துள்ளனர்.
வெகுஜனங்களின் ரசனைக்கேற்ற பிளாக்பஸ்டர் வெற்றிகளை தந்து வரும் ஹரிஷ் ஷங்கர், மீண்டும் மக்களை பெரிதும் மகிழ்விக்கும் ஒரு பிரமாண்ட புராஜக்டை இயக்கவுள்ளார். இப்படத்தில் இதுவரை பார்த்திராத மாஸ் அவதாரத்தில் அதிரடி போலீஸ் அதிகாரி அவதாரத்தில் பவன் கல்யாணை காட்சிப்படுத்தவுள்ளார். முக்கிய வேடங்களில் முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிக்கும் இப்படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடிக்கவுள்ளார்.