“ஐமா” திரை விமர்சனம்

தமிழ் எக்ஸோடிக் பிலிம்ஸ் (Tamil Exotic Films ) நிறுவனம் சார்பில் சண்முகம் ராமசாமி தயாரிப்பில், ராகுல் ஆர். கிருஷ்ணா இயக்கத்தில், யூனஸ், எல்வின் ஜூலியட், அகில் பிரபாகரன், ஷாஜி, ஷீரா உள்ளிட்ட நடிகர் நடிகைகள் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “ஐமா”.

ஆதாம் (யூன்ஸ்) தன் தாயின் உடல் நிலை பாதித்ததால் அவரை மருத்துவமனையில்  சேர்க்கிறான். அதேபோல் விபத்தில் சிக்கிய மரியா (எல்வின் ஜூலியட் ) அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்கிறாள்.  ஒரு  கட்டத்தில் இவர்கள் இருவரையும் கடத்தி ரகசிய இடத்தில் அடைக்கின்றனர். கை கால் கட்டப்பட்டு கிடக்கும் அவர்கள் ஒரு வழியாக அதிலிருந்து மீண்டு அந்த இடத்திலிருந்து தப்பிக்க முயல்கின்றனர். ஆனால் இவர்கள் இருவரையும் கடத்தி வரும் பேர்விழி ரகசிய திட்டம் தீட்டியிருக்கிறான்.  அதற்காக  இருவரையும்  சித்ரவதை செய்கிறான். இருவரையும் ஏன் கடத்தினான், கடத்தல்காரனின் திட்டம் என்ன என்பது மீதிக்கதை.,.

கதாநாயகனாக நடித்த யூனஸ் துடிதுடிப்பான இளைஞராக  வருகிறார். சில கோணங்களில் தோற்றத்தில் நடிகர் விஜய்யை நினைவூட்டுகிறார். நடிப்பில் இயக்குநர் சொன்னதைச் செய்துள்ளார். குறை சொல்ல ஒன்றும் இல்லை. கதாநாயகி எவ்லின் ஜூலியட் தப்பிக்கும் காட்சிகளில் நல்ல முக பாவங்களைக் காட்டியுள்ளார். அவரது திரைத் தோற்றம் திருப்தியாக உள்ளது. வில்லனாக நடித்திருக்கும் தயாரிப்பாளர் சண்முகம் ராமசாமி குறையில்லாத நடிப்பைக் கொடுத்து வில்லத்தனம் காட்டுகிறார்.

நாயகன் – நாயகி பாத்திரங்களின் மூலம் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுப்பவர்கள் தங்கள் உயிருக்கு ஆபத்து வரும்போது அதிலிருந்து தப்பித்து உயிர் வாழவே எண்ணுகிறார்கள் என்ற உளவியல் உண்மையைக் காட்டியுள்ளார்கள். அவர்களின் உயிர் தப்பித்தல் முயற்சிகளை அணு அணுவாக ரசிக்கும் வில்லனின் குரூர குணமும் காட்டப்பட்டுள்ளது. திரில்லர் படம் என்ற சமிக்ஞை படத்தின் தொடக்கத்திலேயே தெரிகிறது. பேய் படமாக இருக்குமோ என்று யோசிக்க வைத்து மெல்ல, மெல்ல சைன்ஸ் பிக்ஷனாக மாறுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button