குதிரைவால் திரை விமர்சனம் ( 2/5 )

பா.ரஞ்தித் மற்றும் யாழி பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான திரைப்படம் குதிரைவால்.மனோஜ்லியோனல் ஹாசன், ஷ்யாம் சுந்தர் ஆகிய இருவரும் இந்த படத்தை இயக்கியுள்ளனர்.கலையரசன் கதாநாயகனாகவும்,அஞ்சலி பாட்டில் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

கதாநாயகன் கலையரசன் தூங்கி எழும்போது அவருக்கு வால் முளைத்திருக்கிறது.படம் முழுவதும் வால் முளைத்த காரணத்தைத் தேடி அலைகிறார். கனவில் தான் வால் முளைத்தாக தனக்கு வந்த கனவை மறந்து கனவுகளுக்கு குறி சொல்லும் பாட்டியை சந்தித்து குறி கேட்கிறார். அந்த பாட்டியோ கனவை ஞாபகப்படுத்த சொல்கிறார்.

வங்கியில் வேலை பார்க்கிறார் அவ்வப்போது டென்சனாகி வீட்டிற்கு வந்து மது அருந்திவிட்டு மீண்டும் வேலை பார்க்கிறார். அப்போது பந்தை வைத்து விளையாடும் போது கோபமாகி வங்கியின் மேலாளரை தாக்கி வேலையை இழக்கிறார். வீட்டில் தனக்கு பாலிசி எடுக்க வந்த ஊழியரிடம் பெயரை மறந்து மாற்றிப் பேசியதோடில்லாமல் பாசிஷ சித்தாந்த அரசியல் பேசுகிறார்.பிறகு தனது குடியிருப்பு வளாகத்தில் நாயிடன் வாழும் ஒருவருடன் மது அருந்திவிட்டு வானத்தில் இருக்கும் நிலாவைப் பார்த்து நிலா ஏன் ஒரே இடத்தில் நிற்கிறது என கேட்கிறார்.அவரோ சங்கை காதில் வைக்க கடல் அலையின் சத்தத்தை கேட்டு மீண்டும் கனவில் மிதக்கிறார்.

அதில் மலைக் கிராமத்தில் ஒரு சிறுவனும் சிறுமியும் நட்பாக சுற்றித் திரிகிறார்கள்.சிறுவனின் அக்கா திடீரென கற்பமடைகிறாள்.அவரது தந்தை கோபமடைந்து அடிக்கிறார். பிறகு கரு கலைகிறது. தந்தை ஒரு பெண்ணை கல்லால் அடிக்கிறார் அந்த பெண் மாயமாகிறாள்.பிறகு சிறுமியும் இறந்து போகிறாள்.

கனவு கலைந்து அந்த கிராமத்தில் உள்ள கிணற்றில் வாலுடன் இறங்குகிறார் கதாநாயகன்.அங்கு இறந்து போன சிறுமியிடம் பேசுகிறார். இப்படியே படம் முழுவதும் புரியாத புதிராகவே நகர்கிறது.

படத்தை எடுப்பதற்கு முன் தயாரிப்பாளர்களுக்காவது படத்தின் கதையை இந்த இரட்டை இயக்குனர்கள் புரிய வைத்திருப்பார்களோ என்னவோ..!? படம் பார்த்த யாருக்கும் புரியவில்லை. இயந்திர மயமான இன்றைய சூழலில் நேரம் கிடைக்கும் போது சினிமா பார்த்து மனதை ரிலாக்ஸ் படுத்தலாம் என்று நினைப்பவர்களுக்கு இந்த படம் குழப்பத்தையும் கோபத்தையுமே உண்டாக்கும்.

ஏதோவொரு பதட்டத்துடன் பீர்பாட்டிலும் சிகரெட்டுமாக படம் முழுவதும் காட்சியளித்தாலும் கலையரசன் நடிப்பு பாராட்டுக்குரியது.கதாநாயகி அஞ்சலி பாட்டில் அவ்வப்போது வந்து போனாலும் அவரும் நன்றாகவே நடித்துள்ளார். படத்தில் கலை இயக்குனரின் பணி பாராட்டுக்குரியது. பெட்டிக்கடை நடத்துபவராக நடித்தவர் ஒவ்வொரு முறையும் பல இடங்களில் சொரிந்து மூக்கில் நுகர்ந்து பார்க்கிறார்.எதற்காக அந்த மேனரிசம் என்று புரியவில்லை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button