“ஜெய் விஷயம்” படத்தின் திரைவிமர்சனம்
அறிமுக இயக்குநர் ஜெகதீஸ்வரன் நாகேஸ்வரன் இயக்கத்தில், நடிகர் ஆகாஷ் தயாரித்து, நாயகனாகவும், அக்ஷயா, ராஜேந்திரன், மைக்கேல் அகஸ்டின் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “ஜெய்விஷயம்”.
நாயகன் ஜெய் ஆகாஷ், தனது வாழ்க்கையில் கடந்த காலங்களில் என்ன நடந்தது என்பதை முழுவதுமாக மறந்து வாழ்ந்து வருகிறார். அந்த சமயத்தில் அவர்மீது கொலை பழி விழுகிறது. ஒரு குடும்பத்தையே கொலை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் அவரை கைது செய்ய, தான் அந்த கொலையை செய்யவில்லை என்று அப்பாவியாக கூறுகிறார்.
பின்னர் தனது வாழ்க்கையில் நடந்தது எதுவும் ஞாபகம் இல்லை என்றும் கூறுகிறார் இறுதியில், அந்த கொலை யார் செய்தது.? ஜெய் ஆகாஷுக்கு என்ன நடந்தது.? அவரின் குடும்பத்திற்கு என்ன நடந்தது என்பது மீதிக்கதை..
ஜெய் ஆகாஷின் முந்தைய படங்களோடு இந்த படத்தை எந்த வகையிலும் ஒப்பிட முடியாது. இயக்குநர், கதை, ஒளிப்பதிவாளர் என படத்தின் அனைத்து விஷயங்களிலும் ஜெய் ஆகாஷ் கவனம் செலுத்தி இருக்கலாம். ஒரு பிரபலமான நடிகர் இதுபோன்ற அனுபவம் இல்லாத நபர்களோடு பயணம் செய்தால் அவரது பெயருக்கும் தான் கலங்கம் ஏற்படும்.