“லவ்வர்” திரைவிமர்சனம்
மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் & எம்.ஆர்.பி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்களின் தயாரிப்பில், பிரபு ராம் வியாஸ் இயக்கத்தில், மணிகண்டன், ஶ்ரீ கௌரி ப்ரியா, கண்ணா ரவி, சரவணன், கீதா கைலாசம் உள்ளிட்டோர் நடிப்பில், சக்தி ஃபிலிம் ஃபேக்டரி வெளியிட்டுள்ள படம் “லவ்வர்”.
கதைப்படி… அருண் ( மணிகண்டன் ) சொந்தமாக கஃபே வைக்கும் முயற்சியில், ஊதாரி நண்பர்களோடு போதைக்கு அடிமையாகி ஊர் பொழுதைக் கழித்து வருகிறார். இவரும் ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் திவ்யாவும் (ஶ்ரீ கௌரி ப்ரியா ) ஆறு வருடங்களாக காதலிக்கின்றனர். திவ்யா எது செய்தாலும் இவரைக் கேட்காமல் செய்யக்கூடாது, எதுவாக இருந்தாலும் என்னிடம் அனுமதி கேட்டுத்தான் செய்ய வேண்டும் என்கிற அளவுக்கு தன் மனைவியாக நினைத்து கட்டளையிடுகிறார். கல்லூரியில் படிக்கும் போது உருவான இவர்களது காதலில், நாளடைவில் விரிசல் ஏற்படுகிறது. காதலர்களுக்கிடையில் சண்டையும் சமாதானமும் சகஜம் என்பதுபோல் சிலநாட்களில் மீண்டும் சந்தோஷமாக இருக்கிறார்கள்.
பின்னர் இவரது அடக்குமுறைக்கு எதிராக தனக்கு விருப்பமான நண்பர்களுடன், விரும்பிய இடத்திற்குச் சென்று சந்தோஷமாக இருக்கிறார் திவ்யா. இந்த விஷயத்தை சமூக வலைதளம் மூலமாக தெரிந்துகொண்ட அருண் மீண்டும் திவ்யாவிடம் சண்டை போட, அருணின் காதலுக்கு ப்ரேக் கப் சொல்கிறார். அருண் எவ்வளவோ முயன்றும் திவ்யா தனது மனதை மாற்றிக்கொள்ள மறுக்கிறார்.
இவர்கள் இவரும் இணைந்தார்களா ? அருணின் கஃபே வைக்கும் முயற்சி என்னானது என்பது மீதிக்கதை…
வயது கோளாறால் ஏற்படும் காதல் உடல் சம்பந்தப்டது மட்டுமல்ல, மனம் சம்பந்தப்பட்டது என்பதை இயக்குநர் தனது அற்புதமான திரைக்கதையின் காட்சிகளை நகர்த்தியிருக்கிறார். இன்றைய காலகட்டத்தில் ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களின் மனவோட்டத்தை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் காட்சிப் இயக்குநருக்கு பாராட்டுக்கள்.
தனது காதலி யாரிடமும் பேசக்கூடாது, எந்த ஆணிடமும் நெருங்கி பழகக் கூடாது, மீறினால் சண்டை போடுவதும் குடிப்பதும் என கதாப்பாத்திரமாக வாழ்ந்திருக்கிறார் மணிகண்டன். ஒரு பெண் தனது எதிர்காலத்தை நினைத்து நிகழ்காலத்தில் எடுக்கும் முடிவுகள், மணிகண்டனின் தாயாரிடம் பேசும்போது தனது எமோஷனலான நடிப்பு, காதலில் வயப்பட்ட பெண் என தனது நடிப்புத் திறமையை நிரூபித்திருக்கிறார். எதிர்காலத்தில் சிறந்த நடியாக வலம் வருவார் ஶ்ரீ கௌரி ப்ரியா.
கண்ணா ரவி உள்ளிட்ட மற்ற நடிகர் நடிகைகள் அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.