ஜெய் ஆகாஷின் “ஜெய் விஜயம்” படத்தின் வெற்றி விழா !

ஏ கியூப் மூவிஸ் ஆப் சார்பில் ஜெய் ஆகாஷ் ஹீரோவாக நடித்து  தயாரித்திருப்பதுடன் ஜெய் சதீசன் நாகேஸ்வரன் என்ற தனது நிஜப் பெயரில் இயக்கிய படம் ஜெய் விஜயம். இதில் கதாநாயகியாக அக்ஷயா கொண்டமுத்து நடித்துள்ளார். அட்சயாராய், ஏ சி பி ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமான புதுமுகங்கள் நடித்திருக்கின்றனர்.
இப்படம் சமீபத்தில் தியேட்டரிலும், A க்யூப்  மூவிஸ் ஆப்பில்  ( A Cube movies  App) வெளியானது. இதையடுத்து சென்னையில் ஜெய் விஜயம் படத்தின் வெற்றி விழா   கொண்டாடப்பட்டது. இதில் முன்னாள் மாவட்ட அமர்வு நீதிபதி மொஹமத் ஜியாவு தீன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அன்புச் செழியன், ஜாகுவார் தங்கம், ஐ.ஜே.கே கட்சியின் துணைத் தலைவர் ஆனந்த முருகன், நடிகர்கள் பிர்லா போஸ், காதல். சுகுமார், முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் நடிகர் ஜெய் ஆகாஷ் பேசியதாவது.. ஜெய் விஜயம் படம் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி. இப்படத்தை முதலில் ஏ கியூப் மூவிஸ் செயலியில் வெளியிட்டேன். எனக்கு உலகம் முழுவத்ம் 3 லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள். சினிமாவில் நடித்தபோது எனக்கு கிடைத்த ரசிகர்களும் விஜய் டி வியில் நீ தானே என் பொன் வசந்தம் சீரியலில் நடித்தபோது ஆண்கள், பெண்கள் என லட்சக்கணக்கில் ரசிகர்கள் கிடைத்தனர். அனைவரும் என்னுடைய  ரசிகர் மன்றத்தின் உறுப்பினர்களாக உள்ளனர்.

நான் ஏ கியூப் செயலியில் படம் வெளியிட்டால் அந்த படத்தை கட்டணம் செலுத்தி டவுன் லோடு செய்து உடனே பார்த்து பாசிடிவ் கமெண்ட் பகிர்வார்கள். அப்படித்தான் ஜெய் விஜயம் படத்துக்கு பாராட்டு குவிந்தது. அதை பார்த்து விட்டுத்தான். இப்படத்தை தியேட்டரில் வெளியிடுங்கள் என்று பலர் கூறினார்கள். தியேட்டரில் எனக்கு லாபம் கிடைக்கவில்லை. ஆனால் என்னுடைய ஏ கியூப் செயலியில் படத்தை ரிலீஸ் செய்ததில் இரண்டரை கோடி சம்பாதித்துவிட்டேன். இதிலேயே எனக்கு பட்ஜெட்டை விட இரு மடங்கு லாபம் கிடைத்துவிட்டது. இப்போது தொழில் நுட்ப வளர்ச்சி அதிகரித்து விட்டது. சினிமாவை தியேட்டரில்தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. படம் நன்றாக இருந்தால் அவர்கள் செயலியில் டவுன்லோட் செய்து பார்க்க தவறுவதில்லை. இனி சினிமா தியேட்டர்களில் பொங்கல், தீபாவளிக்கு மட்டுமே பெரிய படங்கள் ரிலீஸ் ஆக வேண்டிய நிலை வரும். அது நன்றாக இருந்தால் மக்கள் பார்ப்பார்கள் இல்லாவிட்டால் பார்க்க மாட்டார்கள்.

ஜெய் விஜயம் படத்தை இயக்கி தயாரித்து நடித்தேன். நீண்ட நாட்களுக்கு பிறகு நான் நடித்த படங்களில் எனக்கு வெற்றி படமாக ஜெய் விஜயம் அமைந்தது. அடுத்து அமைச்சர் ரிட்டர்ன் என்ற படத்தில் நடித்திருக்கிறேன். அதேபோல் மாமரம் படத்திலும் நடித்திருக்கிறேன். இந்த இரண்டு படங்களுமே பெரிய பட்ஜெட் படம். அமைச்சர் ரிட்டர்ன் படத்தை நானே இயக்கி இருக்கிறேன். தயாரிப்பாளர்கள் கேட்டுக் கொண்டதால் இயக்கினேன். கமர்ஷியல் படமாக நன்றாக வந்திருக்கிறது. இரண்டு படங்களும் அடுத்தடுத்து  வெளியாக உள்ளது.

ஜெய் விஜய் படத்தைப் பொறுத்த வரை பத்திரிகையாளர்களுக்கு
சிறப்பு காட்சி திரையிட்ட பிறகு அதற்கு அவர்கள் பெரும்பாலும் பாசிடிவான விமர்சனங்கள் தந்தனர். படத்தின் வெற்றிக்கு இது முக்கிய காரணமாக அமைந்தது. நான் கிளிசரின் போடாமல் கண்ணீர் விட்டு அழுது நடித்த காட்சியை பாராட்டியதுடன் படத்தில் புகை மூட்டம் போன்ற  ஒரு கதாபாத்திரம் வரும் அது ஏன் அப்படி படமாக்கப்பட்டது என்பதையும் குறிப்பிட்டிருந்தார்கள். நான் என்னவெல்லாம் உணர்ந்து படத்தை எடுத்தேனோ அந்த உணர்வு முழுவதும் அந்த  விமர்சனத்தில் இருந்தது. மேலும் ஜெய் விஜயம், ஜெய் ஆகாஷுக்கு ரீ என்ட்ரி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த வாக்கு பலித்து விட்டது. தற்போது 4 வெளிப் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. வெவ்வேறு இயக்குனர்கள் இயக்குகிறார்கள்.

ஜெய் விஜயம் படத்தை தமிழ் ராக்கர்ஸ் போன்றவற்றில் திருட்டுத்தனமாக டவுன்லோடு செய்து வெளியிட்டிருந்தார்கள். அது எனக்கு கோபத்தை உண்டாக்கியது. ஆனால் என் நண்பர் கூறும்போது “உன் படத்தை ரசிகர்களும் மக்களும் பார்க்க விரும்புகிறார்கள் அதனால்தான் இதுபோன்ற திருட்டு இணைய தளத்திலும் படத்தை திருடி போட்டிருக்கிறார்கள். இது சினிமாவில் உனக்கு கிடைத்த வெற்றி” என்றார். அதை கேட்டு சந்தோஷப்பட்டுக் கொண்டேன்.
தமிழில் என் படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. எல்லோரும் இங்கு வாழ்த்தும் போது நடிகர் ஜெய்சங்கர் போல் ஒவ்வொரு வெளிக் கிழமையும் ஜெய் ஆகாஷ் படம் வெளி வர வேண்டும் என்றார்கள். அந்த ஆசை எனக்கும் உள்ளது. நிறைய படங்களில் நான் நடிப்பேன். என் மீது அன்பும் ஆதரவும் காட்டும் ரசிகர்கள், ரசிகைகள் அனைவருக்கும் நன்றி என்றார்.

முன்னாள் மாவட்ட அமர்வு நீதிபதி மொஹமத் ஜியாவுதீன் பேசும்போது, நான் விருப்ப ஓய்வுதான் பெற்றேன். நீதிபதிகளுக்கு எப்போதும் வேலை இருந்து கொண்டுதான் இருக்கும். கோர்ட் முடிந்தவுடன் வீட்டுக்கு வந்து வழக்கு கோப்புகளை பார்க்க வேண்டி இருக்கும் . இதனால் டென்ஷன் இருந்து கொண்டே இருக்கும். சற்று இளைப்பாற சினிமாவில் வரும் காமெடி காட்சிகள் பார்த்து ரிலாக்ஸ் ஆவோம். திரையில்தான் நாங்கள் நடிகர்களை பார்ப்போம். நேரில் பார்க்க முடியாது.

இந்நிலையில் தான் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றேன். அப்போது நடிகர்  ஜெய் ஆகாஷ் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். நாங்கள் இருவரும் நாள் முழுவதும் நிகழ்வில் பங்கேற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வேறு வழியில்லாமல் இருவரும் அங்கிருந்தோம் அப்போதுதான் எனக்கு ஜெய் ஆகாஷ் நண்பர் ஆனார். அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவரது நல்ல உள்ளத்தை அறிந்துக் கொண்டேன். அவர் மற்றவர்களுக்கு செய்யும் உதவிகள் பற்றியும் தெரிய வந்தது. அவர் என் மனதில் இடம் பிடித்து விட்டார். அந்த நட்பில்தான் ஜெய் விஜயம் விழாவில் கலந்து கொண்டு படத்தில் பணியாற்றிய வர்களுக்கு வெற்றி கேடயம் வழங்க வேண்டும் என்றார். அதை என்னால் மறுக்க முடியவில்லை. அந்த நட்புக்காக இந்த விழாவில் கலந்து கொள்ளவந்தேன். இதுவரை சினிமா விழா எதிலும் நான் கலந்து கொண்டதில்லை. இது தான் நான் கலந்து கொண்ட முதல் சினிமா விழா. இப்படத்தில் சிறப்பாக நடித்த ஜெய் ஆகாஷ் உள்ளிட்டவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button