“சத்தமின்றி முத்தம் தா” படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

செலிபிரைட் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் கார்த்திகேயன்.S தயாரிப்பில், ஸ்ரீகாந்த் – பிரியங்கா திம்மேஷ் நடிப்பில், இயக்குநர் ராஜ் தேவ் இயக்கியுள்ள சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படம் “சத்தமின்றி முத்தம் தா”. மார்ச்-1 ஆம் தேதி திரைக்கு வந்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வினில், நாயகி பிரியங்கா திம்மேஷ் பேசியதாவது.., இந்தப் படத்திற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது திடீரென்று நடந்த ஒரு விஷயம். முதல் நாள் எனக்கு போன் செய்து இந்தப் படத்தைப் பற்றிச் சொன்னார்கள் அடுத்த நாள் நான் சென்னை வந்து இந்த படத்தில் கலந்து கொண்டேன், இதற்கு முதலில் நான் ஶ்ரீகாந்த்துக்கு தான் நன்றி சொல்ல வேண்டும், இயக்குநர் என்னிடம் கதை சொல்லும்போது எனக்கு மிகவும் பிடித்தது. இந்தப் படத்திற்குத் தேவையான உழைப்பைக் கண்டிப்பாகக் கொடுப்பேன் என்று சொன்னேன், சொன்னதைச் செய்துள்ளேன் என்று நம்புகிறேன் என்றார்.

இசையமைப்பாளர் ஜுபின் பேசியதாவது… இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி, ஆனந்த் தான் நான் இந்தப் படத்தில் பணியாற்ற மிக முக்கிய காரணம் அவருக்கு மீண்டும் எனது நன்றி, இதுவரை நான் பணியாற்றிய படங்களுக்கும் இதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. பாடல்கள் அனைத்தும் மிக நன்றாக வந்துள்ளது, அதில் ஒரு பாடல் ஆண்ட்ரியா பாடியுள்ளார், பாடலாசிரியர் நல்ல வரிகளைக் கொடுத்துள்ளார் அதற்கு நன்றி, படம் ஆரம்பத்தில் பரபரப்பாக இருந்தாலும் முடிவு உங்களைக் கண்கலங்க வைக்கும், ஶ்ரீகாந்த்தினால் இன்று இங்கு வர முடியவில்லை ஆனால் இந்தப்படத்தில் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். மொத்த குழுவுக்கும் எனது வாழ்த்துகள் என்றார்.

இயக்குநர் ராஜ்தேவ் பேசியதாவது.., இந்தப் படம் ஆரம்பம் முதல் இறுதி வரை த்ரில்லராக இருக்க வேண்டும் என்று நினைத்தேன், அது போலத்தான் எழுதவும் ஆரம்பித்தேன், மிகவும் சிரமமாக இருந்தது, இந்தப் படத்திற்காக நடிகர்களைத் தேர்வு செய்யும்போது  இது போன்ற கதைகள் கொண்ட படங்களில் நடிக்காதவர்களைத் தான் செய்ய வேண்டும் என்று நினைத்தேன், அப்படித்தான் ஶ்ரீகாந்த்தை சந்தித்து இந்த படத்தைப் பற்றிப் பேசினேன். அனைத்து நடிகர்களையும் அப்படித்தான் தேர்வு செய்தேன். படம் முழுக்க முழுக்க திரில்லாரகவே இருக்கும். கதாநாயகியும் சிறப்பாக நடித்தார். ஹீரோவுக்கு நிகராக இந்தப் படத்தில் நடித்தார், இசையமைப்பாளரும் நானும் நிறைய டிஸ்கஸ் செய்தோம், படத்தில் பாடல்கள் மிக அருமையாக வந்துள்ளது. படம் கண்டிப்பாக உங்கள் இருக்கை நுனியில் அமர வைக்கும் என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button