இரண்டாவது “ஆட்டத்தை” தொடங்கும் நடிகர் மோகன்

விஜய் ஸ்ரீ இயக்கத்தில் உருவாகும் வெள்ளி விழா நாயகன் மோகனின் ‘ஹரா’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.

இந்த விழாவில் இயக்குநர் விஜய் ஸ்ரீ, தயாரிப்பாளர்கள் எஸ்பி மோகன் ராஜ், ஜெயஸ்ரீ விஜய், தொழில்நுட்ப கலைஞர்கள், மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. இதில் மோகன் உற்சாகமாக கலந்துகொண்டார் .

சென்னையில் படப்பிடிப்பு முடிந்தவுடன், கோயம்புத்தூர் மற்றும் ஊட்டியில் படப்பிடிப்பை தொடர திட்டமிட்டுள்ளனர். இதுவரை மோகனை பல்வேறு கதாபாத்திரங்களில் பார்த்து ரசித்து கொண்டாடியது போல, ‘ஹரா’ படத்திலும் அவரது கதாபாத்திரம் மிகவும் பேசப்படும் என்கின்றனர் படக்குழுவினர்.


Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button