“தலைமைச் செயலகம்” சீரிஸின் டிரெய்லர் வெளியீடு !

தமிழக அரசியல் பின்னணியில், இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில், நடிகர் கிஷோர், ஸ்ரேயா ரெட்டி, ஆதித்யா மேனன் மற்றும் பரத் நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் சீரிஸான “தலைமைச் செயலகம்” சீரிஸ் மே 17ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE-5, தனது அடுத்த அதிரடி சீரிஸான ‘தலைமைச் செயலகம்’ சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டது. இந்த சீரிஸ் தமிழக அரசியலில் இரக்கமற்ற அதிகார வேட்கையைக் கூறும் அழுத்தமான பொலிடிகல் திரில்லராக உருவாகியுள்ளது. தேசிய விருது பெற்ற இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில், ராடான் மீடியாவொர்க்ஸின் தயாரிப்பாளர் ராதிகா சரத்குமார் “தலைமைச் செயலகம்” சீரிஸைத் தயாரித்துள்ளார். 8 கொண்ட பொலிடிகல் சீரிஸில் கிஷோர், ஷ்ரியா ரெட்டி, ஆதித்யா மேனன் மற்றும் பரத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஒரு பெண்ணின் இடைவிடாத அதிகார வேட்கை, பேராசை, வஞ்சகம் ஆகியவை பின்னிப்பிணைந்த தமிழக அரசியலின் கதையைச் சொல்லும் இந்த சீரிஸ் மே 17 அன்று ZEE-5 இல் ஸ்ட்ரீமாகவுள்ளது.

தமிழக அரசியல் களத்தின் பின்னணியில் நடக்கும் கதையில், முதல்வர் அருணாசலம் 15 ஆண்டுகளுக்கு முந்தைய ஊழல் வழக்கு விசாரணையை எதிர்கொள்கிறார், இந்த விசாரணையால் அவரைச் சுற்றியுள்ளவர்கள் முதல்வர் நாற்காலிக்கு ஆசைப்படுவதோடு அதற்காகத் தீவிரமாக இயங்க ஆரம்பிக்கிறார்கள். இதற்கிடையில், ஜார்க்கண்டில் உள்ள ஒரு தொலைதூர சுரங்க கிராமத்தில், சிபிஐ அதிகாரி நவாஸ் கான் இரண்டு தசாப்தங்கள் பழமையான கொலை வழக்கை ஆராய்கிறார். பரபரப்பான சென்னையில், புறநகர்ப் பகுதியில் கிடைக்கும் துண்டிக்கப்பட்ட கை மற்றும் தலையினை குறித்து டிஜிபி மணிகண்டன் ஒரு பயங்கரமான கண்டுபிடிப்பு குறித்து விசாரணையைத் தொடங்குகிறார். இந்த கதை விரிய விரிய வேறுபட்ட பல நிகழ்வுகளை ஒன்றிணைகின்றது, காலத்தால் மறைக்கப்பட்ட மறந்துபோன உண்மைகளின் மீது ஒளி பாய்ச்சுகிறது.

பதபதவைக்கும் சஸ்பென்ஸ், சூழ்ச்சி மற்றும் சிலிர்க்க வைக்கும் உண்மைகளை வெளிப்படுத்தும் ‘தலைமைச் செயலகம்’ சீரிஸ் ZEE-5 இல் பிரத்தியேகமாக 17 மே 2024 முதல் கண்டுகளியுங்கள்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button