நடிகர் மோகனின் “ஹரா” படத்தில், வாரிசை நடிகராக்கிய பத்திரிகையாளர் !.?

இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான இளைஞர்கள், அதி வேகமான இயந்திர வாழ்க்கையில் சிக்கி, பல விதமான போதை பழக்கங்களுக்கு அடிமையாகி, பாதை மாறி செல்பவர்களுக்கு மத்தியில், வெகு சிலரே தங்களின் கனவுகளை நிஜமாக்க ஓடுகிறார்கள்.

அப்படி காண்கிற கனவுகளில் பிரதானமானது சினிமாவில் நடிகராவது… ஆனால் நிஜத்தில் சினிமாவை எட்டி பிடிப்பது அவ்வளவு எளிதல்ல அதற்கு பல காரணங்கள் உண்டு. திரையுலகில் நுழைவதற்கு கண்டிப்பாக சிபாரிசு, வாரிசு என பல சூழல்களில் பலர்  ஹீரோவாகவும், இயக்குனராகவும் களத்தில் இறங்கி தோல்வி கண்டு காணாமல் போகும் காலத்தில், ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து கல்லூரி படிப்பை முடித்து ஒருவன் சினிமாவை அடைகிறான் என்றால் அவனுக்கு இந்த சினிமா ஏதோ ஒரு இடத்தை வழங்க காத்திருக்கிறது என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும்.

அதிலும் முதல் படத்திலேயே வெள்ளிவிழா நாயகன் மோகனுக்கு இரண்டாவது இன்னிங்க்ஸ் படமாக அமைந்துள்ள “ஹரா” படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம். அதோடு திரை பிரபலங்கள் மைம் கோபி, சுரேஷ் கோபி, அனுமோல், மொட்டை ராஜேந்திரன், வனிதா விஜயகுமார், அனித்ரா, கவுஷிக் என ஏராளமான  நட்சத்திரங்களுடன் சந்தோஷ் பிரபாகர் நடித்திருக்கிறார். இவர் பத்திரிகையாளரும் சினிமா விமர்சகருமான கோடங்கி ஆபிரகாமின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது தந்தை சினிமா விமர்சகர், பத்திரிகையாளர் என்பதால் சிபாரிசு அடிப்படையில் வாய்ப்பு கிடைத்திருக்கும் என பலருக்கும் நினைக்கத் தோன்றும்…

ஆனால் “ஹரா” பட வாய்ப்பு எவ்வாறு கிடைத்த்து என அறிமுக நடிகர் சந்தோஷ் பிரபகரிடம் கேட்டபோது, எனது தந்தை திரையுலகில் செய்தியாளராக இருந்தாலும் சிபாரிசு செய்வதை விரும்ப மாட்டார். “ஹரா” பட இயக்குனர் விஜய்ஸ்ரீஜி அலுவலகத்திற்கு ஆடீஷனுக்கு போய் சின்ன ரோலில் நடிக்க தேர்வானேன். எனக்கு “ஹரா” முதல் படமல்ல… நான் நடிக்கத் தேர்வானது இதே  இயக்குனர் விஜய்ஸ்ரீஜியின் ”பப்ஜி” படத்திற்காக. அதில் மிகச்சிறிய வேடம். அதில் எனது நடிப்பை பார்த்து அதன் பின்னர்தான் “ஹரா” வாய்ப்பு கிடைத்தது. அதிலும் தமிழ் சினிமாவின் வெள்ளிவிழா நாயகன் மோகனுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது பெரும் மகிழ்ச்சி. இதற்கு காரணமான இயக்குனர் விஜய்ஸ்ரீஜிக்கு நன்றி. ஹரா படம் சொல்லவேண்டிய கதை. இயக்குனர் விஜய்ஸ்ரீஜி மிக அழகாக எங்களை பயன் படுத்தி இருக்கிறார் என்றார்.

பத்திரிகையாளரின் வாரிசு “சந்தோஷ்” சினிமாவில் அறிமுகமாகிறார் எனத் தெரிந்ததும் சந்தோஷப்படாமல் இருக்க முடியுமா என்ன ? ஆகையால்.. தமிழ்த்திரை ( மாதம் இருமுறை இதழ் ) குழுமத்தின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button