சோனி நிறுவனத்தின் “மோர்பியஸ்” திரைப்படம் ஏப்ரல் 1-ல் வெளியீடு

SONY நிறுவனத்தின் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான “ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் மற்றும் அன்சார்டட்” படங்கள் உலகமெங்கும் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இந்நிறுவனத்தின் அடுத்த பிரமாண்ட தயாரிப்பாக, ரசிகர்கள் பேராவலுடன் எதிர்பார்த்த “மோர்பியஸ்” Morbius திரைப்படம் வரும் ஏப்ரல் 1 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.

மார்வல் கதாப்பாத்திரங்களில் மிக முக்கியமான, மிக சிக்கலான, மார்வலிலேயே மிக பலமிகுந்த எதிர் பார்த்திரமான மோர்பியஸ் பாத்திரம் முதல் முறையாக திரையில் வருகிறது. மிகச்சிறந்த டாக்டரான மோர்பியஸ் மிக வித்தியாசாமான இரத்தம் சம்பந்தமான நோயினால் பாதிக்கப்படுகிறார் அவருக்குள் புகும் இருள் சக்தியை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பது தான் இந்தப்படத்தின் திரைக்கதை. உலகம் முழுக்க மோர்பியஸ் கதாப்பாத்திரத்திற்கென்றே தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. என்பது குறிப்பிடதக்கது.

தான் ஏற்கும் கதாப்பாத்திரங்களில் தனித்தன்மையை புகுத்தி ஒவ்வொரு முறையும் ஆச்சர்யப்படுத்தும் ஆஸ்கர் விருது வென்ற நாயகன் Jared Leto, இப்படத்தில் மோர்பியஸ் பாத்திரத்தில் நடித்துள்ளார். உடலை முழுமையாக மாற்றும் பாத்திரங்கள் மீது எனக்கு தனித்த ஈர்ப்புண்டு, இக்கதாப்பாத்திரம் மனதளவிலும், உடலளவிலும் பெரும் சாவலை கோரியது இப்படம் ரசிகர்களுக்கு ஒரு அருமையான விருந்தாக இருக்குமென்று கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button