கோவா சர்வதேச திரைப்பட விழாவில் சாவர்க்கர் வரலாற்று படம்

இந்திய அரசாங்கத்தின் சார்பில் கோவாவில் நடை பெற உள்ள 55 வது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட 25 திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. வணிக ரீதியாக வெற்றி பெற்ற, மக்களை கவர்ந்த படங்கள் இந்த பட்டியலில் இருந்த போதும், மத்திய அரசு சார்பில் நடைபெறும் இந்த விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் சாவர்கரின் வாழ்க்கை வரலாற்று படத்தை முதல் திரைப்படமாக தேர்வு செய்துள்ளது இந்திய திரையுலகினரையும், சினிமா ஆர்வலர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்தியாவில் நடைபெறும் திரைப்பட விழாக்களில் முக்கியமானது கோவா சர்வதேச திரைப்பட விழா. கோவா மாநிலத்தில் உள்ள பனாஜி நகரில் 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நவம்பர் 20-ம் தேதி தொடங்கி 28-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியன் பனோரமா பிரிவில் 25 முழு நீள திரைப்படங்களும், 20 ஆவண திரைப்படங்களும் திரையிடப்பட உள்ளன. முழு நீள (feature flim) திரைப்பட பிரிவில் சாவர்க்கரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவான ‘ஸ்வதந்திரவீர் சாவர்க்கர்’ திரைப்படம் முதல் படமாக திரையிடப்பட உள்ளது. இந்தப் படத்தை ரன்தீப் ஹுடா இயக்கி நடித்தது குறிப்பிடத்தக்கது.

அந்த 25 திரைப்படங்களில் 5 திரைப்படங்கள் முக்கியத் திரைப்படங்களாகத் தேர்வாகியுள்ளது. அந்த ஐந்தில் ‘கல்கி 2898 ஏடி (தெலுங்கு), மஞ்சுமல் பாய்ஸ் (மலையாளம்), கர்கானு (குஜராத்தி), 12வது பெயில் (ஹிந்தி), ஸ்வார்கரத் (அசாமி) ஆகிய படங்கள் இடம் பெற்றுள்ளது. மற்ற 20 திரைப்படங்களில் ஒரே ஒரு தமிழ்ப் படமாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளிவந்த ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ தேர்வாகி உள்ளது. இந்தத் தேர்வுகளில் மொத்தம் 384 இந்தியத் திரைப்படங்கள் கலந்து கொண்டன. வணிக அம்சம் அல்லாத 20 திரைப்படங்களில் ‘அம்மாஸ் ப்ரைடு’ மற்றும் ‘சிவந்த மண்’ ஆகிய இரண்டு படங்கள் தேர்வாகி உள்ளது. இந்தத் தேர்வில் மொத்தம் 262 படங்கள் கலந்து கொண்டன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button