சூர்யா -45 படப்பிடிப்பில் அடுத்தடுத்து இரண்டு மரணங்கள் ! தொழிலாளிகளை பாதுகாக்க தவறிய பெப்சி நிர்வாகிகள் !
நடிகர் சூர்யாவின் 45 வது படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 45 என பெயரிடப்பட்டு, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில், பிரமாண்டமாக அரங்கு அமைத்து படபிடிப்பு நடந்து வருகிறது. கடந்த மூன்று தினங்களாக நடனக் கலைஞர் ஷோபி தலைமையில் நடன காட்சிகள் படப்பிடிப்பு செய்துள்ளனர்.
அய்யனார் சாமிக்கு கிடா வெட்டி படையல் செய்து, அரிவாளுடன் ஆக்ரோஷமாக சூர்யா நடனமாடும் பாடல் காட்சி படப்பிடிப்பு செய்தபோது, நடனமாடிய பெண் ஹசீனா என்பவர் மயங்கி கீழே சரிந்து விழுந்துள்ளார். கிட்டத்தட்ட ஐந்தாயிரம் பேர் கலந்துகொண்ட இந்த நிகழ்வில், மயங்கி விழுந்த ஹசீனாவின் நிலைமை படுமோசமாகி உள்ளது. பின்னர் கால தாமதத்துடன் மருத்துவமனைக்கு ஹசீனாவை தூக்கிச் சென்றும் உயிரைக் காப்பாற்ற முடியாத சூழலை ஏற்பட்டுள்ளது.
அதேபோல் இனறு கொடுவா அரிவாளுடன் நடமாடிய போது, அறுபது வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரும், மற்றொரு பெண் உள்பட இரண்டு துணை நடிகர்கள் மயங்கி விழுந்ததில், முதியவருக்கு ஏற்பட்ட காயத்திற்கு, தையல் போட்டு மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைமில் சேர்த்துள்ளனர். ஆனால் அவரும் உயிரிழந்துள்ளார். ஆர் ஜே பாலாஜி, சூர்யா படப்பிடிப்பில் அடுத்தடுத்து இரண்டு மரணங்கள் ஏற்பட்டுள்ளதால், திரைப்பட தொழிலாளிகள் அச்சத்தில் உள்ளனர்.