உதயநிதியின் “நெஞ்சுக்கு நீதி” இசை வெளியீட்டு விழா

நெஞ்சுக்கு நீதி திரைப்பட இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா ! தயாரிப்பாளர் போனி கபூர் வழங்கும், ஜீ ஸ்டுடியோ நிறுவனமும், ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க, அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படம் “நெஞ்சுக்கு நீதி”. சமூக அவலத்தை சாடும் ஒரு அழுத்தமான திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெயலர் வெளியீட்டு விழா சமீபத்தில் திரைபிரபலங்கள்,
படக்குழுவினர் கலந்து கொள்ள கோலகலமாக நடைபெற்றது.

இவ்விழாவில் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் பேசும்போது… நெஞ்சுக்கு நீதி அனைவரும் பார்க்க வேண்டிய படம், இந்த படத்தில் நான்கு பாடல்கள். யுகபாரதி ஆழமான வரிகளை கொடுத்துள்ளார், அதற்கு நன்றி. இந்த படத்தில் பல விஷயங்களை பயன்படுத்தியுள்ளோம். என்னுடைய பாடல்களுக்கு நீங்கள் எப்போதும் வரவேற்பு கொடுத்துள்ளீர்கள். எனக்கு முழு சுதந்திரம் கொடுத்த, இயக்குனர் அருண்ராஜாவிற்கு நன்றி. தயாரிப்பாளர் போனிகபூர், ரோமியோ பிக்சர்ஸ் ராகுல், உதயநிதி ஆகிருக்கு நன்றி. ஆயிரம் பொறுப்புகள் இருந்தாலும் உதயநிதி கூலாக இருக்கிறார். படத்தின் பேக்ரவுண்ட் பணிகள் போய்கொண்டிருக்கிறது. படம் நன்றாக வந்துள்ளது. படத்தில் தொழில்நுட்ப குழு சிறப்பாக வேலை பார்த்துள்ளனர். எல்லோருக்கும் நன்றி. இது என்னுடைய 5 வது படம், எனக்கு மகிழ்ச்சி. பாடல் பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள் என்றார்.

பாடலாசிரியர் யுகபாரதி பேசும்போது… இந்தப் படம் முழுக்க முழுக்க உதயநிதி நடித்த முதல் முழு அரசியல் திரைப்படம். ஹிந்தியில் வெளியான ஆர்டிகள் 15 படத்தின் ரீமேக். அது அனைவரும் சமம் என்ற சட்ட பிரிவு, இது அம்பேத்கர் எழுதிய சட்டம். இயக்குனர் அருண்ராஜா காமராஜ் பல பாடல்களை எழுதியுள்ளார், என்னை அவர் கூப்பிட்டது எனக்கு ஆச்சர்யம். ஹிந்தி படத்தில் இருக்கும் அரசியல் வேறு, தமிழக அரசியல் வேறு, அதற்காக பல மாற்றங்களை செய்துள்ளனர், அதற்காகவே இந்த படத்தை பார்க்க வேண்டும். படத்தில் நாட்டுபுற பாடல் ஒன்று வருகிறது. அதற்காக பெரும் உழைப்பை போட்டுள்ளனர், படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள் என்றார்.

நடிகர் RJ பாலாஜி பேசும்போது… நானும், உதயநிதியும் போனிகபூருக்கு படம் செய்துள்ளோம். எனக்கு உதயநிதியை 12 வருஷமாக தெரியும். அவருடன் பழகுவதற்கு எப்போதும் பயமாக இருந்ததில்லை. அவரை மிக எளிமையாக அணுகலாம். அவர் நிறைய உதவிகளை செய்பவர் மிக நல்ல மனிதர், அருண்ராஜா பெரிய இழப்பிற்கு பிறகு இப்படி ஒரு படம் எடுத்தது பெரிய விஷயம். சமூகத்திற்கு இந்த அரசியல் படம் மிக அவசியமான ஒன்று. இந்தியாவில் இன்னும் ஜாதி இருக்கிறது இந்த நிலையில், இப்படி ஒரு படம் அவசியமான ஒன்று, இப்படத்திற்காக உழைத்த ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் வாழ்த்துக்கள். படத்தை நீங்கள் தியேட்டரில் பார்த்து ஆதரவு தர வேண்டும் என்றார்.

நான் ஆர்டிகள் 15 படத்தை அதிகமுறை பார்த்துள்ளேன். அருண்ராஜா இந்த படத்தை ஒரிஜினலை விட சிறப்பாக எடுத்துள்ளார். தமிழகத்தின் வாழ்வியல் நுணுக்கங்களை படத்தில் பதிவு செய்துள்ளார். மொத்த குழுவிற்கும் பெரிய நன்றி என்றார்.

நடிகர் சிவகார்த்திகேயன் பேசும்போது…… உதயநிதி பல வேலைகளை பார்க்கிறார், அது அவரது குடும்ப இரத்ததிலேயே இருக்கிறது. உண்மையான டான் உதயநிதி தான். இத்தனை வருட பழக்கத்தில் அவர் எனக்கு பாசிடிவிட்டியை மட்டுமே தந்துள்ளார். நெஞ்சுக்கு நீதி பவர்வுல் டைட்டில். எனக்கு ரீமேக் எடுக்க பயம், ஆனால் அருண்ராஜா இப்படத்தை சிறப்பாக உருவாக்கியுள்ளார். அருண்ராஜா எனது நண்பன் என்பது பெருமை. கனா போன்ற படத்தை எடுத்து பெரிய வெற்றியை கொடுத்துள்ளார். அருண் பெரிய இழப்பில் இருந்த போது அவனுக்கு உறுதுணையாக இருந்தது உதயநிதி தான். இந்த நெஞ்சுக்கு நீதி பெரிய வெற்றியடையும் என்றார்.

நடிகர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது… இந்த படத்தின் டைட்டில் “நெஞ்சுக்கு நீதி” ஐ கொடுத்த கலைஞருக்கு நன்றி தெரிவித்து தனது உரையை தொடங்கினார். படத்தின் டைட்டிலுக்கு நியாயம் செய்ய முயற்சித்து இருக்கிறோம். போனிகபூர் என்னை அழைத்து ரீமேக் பண்ணலாம் என்று கூறியபோது., இப்படத்திற்கு யாரை இயக்குனராக வைத்து பண்ணலாம் என சந்தேகம் இருந்தது. யாரும் முன்வரவில்லை. கனா படத்தை பார்த்துவிட்டு, அருணை கூப்பிட்ட போது, அருண் ஒத்துகொண்டார். நான் நெஞ்சுக்கு நீதி டைட்டில் உரிமை பற்றி, அப்பாவிடம் கேட்டபோது, பார்த்து பண்ணுங்க என கூறினார். படம் எடுக்கும் போது, கொரோனா பெரிய தடையாக இருந்தது. அருண் மனைவி மற்றும் படத்தில் பணியாற்றி கொரோனாவில் உயிரிழந்தவர்களுக்கு இந்த படத்தின் வெற்றி சமர்பணம். அருண் தமிழ் சினிமாவில் பெரிய இடத்திற்கு செல்வார். நடன இயக்குனர், கலை இயக்குனர், ஒளிப்பதிவாளர் தினேஷ் ஆகியோருக்கு நன்றி. இந்தப்படம் ஒத்துகொண்ட போது பயமாக இருந்தது, எப்படி போலீஸாக நடிக்க போகிறேன் என்ற பயம் இருந்தது. நான் போலீஸாக திரையில் சிறப்பாக வந்ததற்கு பெரிய காரணம் தினேஷ். ஷிவானி ராஜசேகர், குறிஞ்சி கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார். பாடல்வரிகள் பவர்புல்லாக இருக்கும். இந்த படத்திற்கு ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் பெரிய பலம். எல்லோருக்கும் நன்றி. படம் சமூகநீதி பேசும் படம், இந்த சமயத்தில் தேவையான ஒரு படம், உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்று கூறினார்.

இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆரி, தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், யாமினி சந்தர், சுரேஷ் சக்கரவர்த்தி, இளவரசன், மயில்சாமி, அப்துல் லீ, ராட்சசன் சரவணன் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button