“யூத்” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

பார்வதா என்டர்மெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் கருப்பையா சி. ராம் தயாரிப்பில், கென் கருணாஸ் நாயகனாக நடித்து இயக்க, பள்ளி பருவ வாழ்க்கையை மையமாக கொண்டு கடந்த மார்ச் 19-ஆம் தேதி வெளியான “யூத்” திரைப்படம், ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்களிடம் பலத்த பாராட்டுக்களைப் பெற்றதோடு 50 கோடி வசூலைக் கடந்து பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றுள்ளது. மக்களின் வரவேற்பில் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்நிகழ்வினில், தயாரிப்பாளர் கருப்பையா சி. ராம் பேசியதாவது., ‘யூத்’ படம் எனக்கு முதல் படம் தான். ஆனாலும், அந்த முதல் படத்திலேயே இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ₹50 கோடி வசூல் என்பது ஒரு சாதனை தான். ஆனால் அதைவிட பெரிய சாதனை என்னவென்றால் இந்த படத்தை அனைத்து மக்களிடமும் கொண்டு சென்று சேர்த்ததே. இன்று இந்த படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பெரிய வெற்றி பெற்றுள்ளது என்பது இன்னும் பெருமையாக இருக்கிறது. இந்த படத்தின் பயணம் மிகவும் வேகமாக நடந்தது. நாங்கள் அதிகமாக யோசிக்காமல், தைரியமாக முடிவெடுத்தோம். பல சமயங்களில் அதிகமாக யோசித்தால் முடிவு எடுக்க முடியாது. ஆனால் தைரியமாக எடுத்த முடிவுகள் தான் இந்த வெற்றிக்கு காரணம்.
ஒரு காலத்தில் என்னிடம் இரண்டு ரூபாய் கூட இல்லாத நிலை இருந்தது. தேவையான போது அம்மாவிடம் ₹1000, ₹2000 கேட்டுக் கொண்டு வாழ்க்கையை நடத்தினேன். அந்த நிலையிலிருந்து இன்று இவ்வளவு பெரிய மேடையில் நிற்பது இது என்னுடைய முயற்சி மட்டும் அல்ல, பலரின் ஆதரவு. இந்த படத்தை உருவாக்க உதவிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த படம் உருவாக பலர் தங்கள் பங்களிப்பை செய்துள்ளனர். அந்த ஒவ்வொருவரின் ஆதரவும் இந்த வெற்றியின் காரணம்.

இந்த படத்தை பார்த்தவர்கள் மூன்று முறை பார்த்து உணர்ச்சிவசப்பட்டு அழுதார்கள். அந்த உணர்ச்சி தான் இந்த படத்தின் மிகப்பெரிய பலம். தமிழகத்தை தாண்டி கேரளா, கர்நாடகா, தெலுங்கு ஆகிய பகுதிகளிலும் இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. குறிப்பாக தெலுங்கில் நம்மை யாரும் அறியாத நிலையில் கூட, நல்ல மார்க்கெட்டிங் மூலம் இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் நம்பிக்கை. நாம் எதிர்பார்த்ததை விட அதிகமாக கிடைத்தது எல்லாம் கடவுளின் அருள். பலர் கேட்கிறார்கள், ‘இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்த பிறகு அடுத்தது என்ன?’ எனக்கு வெற்றி என்பது தற்காலிகம். ஆனால் நன்றி உணர்வு என்றைக்கும் நிலைத்தது. அதனால் தான் இந்த நன்றி கூறும் விழாவை நடத்த வேண்டும் என்று நினைத்தேன்.
இந்த படம் வெளியான போது பெரிய படங்களுடன் போட்டி இருந்தது. இருந்தாலும், நல்ல படம் என்றால் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் நானும் கென்னும் உறுதியாக இருந்தோம். அந்த நம்பிக்கை தான் இந்த வெற்றியை கொடுத்தது. கென் என்னுடன் ஆரம்பத்தில் எப்படி இருந்தாரோ அதே போல் தான் இப்போது இருக்கிறார். அவருக்கு நானும் ரசிகன் இன்று எல்லோரும் அவரை கொண்டாடுவது மகிழ்ச்சி.
இந்த சினிமா உலகில் புதிய இயக்குநர்கள் சந்திக்கும் சிரமங்களை நான் பார்த்திருக்கிறேன். ஒரு இயக்குநர் நல்ல மனநிலையுடன் இருந்தால் தான் நல்ல படம் உருவாகும். இயக்குநர்களுக்கு முழு ஆதரவு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. இனிமேல் எங்கள் நிறுவனத்தில் வரும் ஒவ்வொரு இயக்குநருக்கும் தயாரிப்பாளர் பதவி (Producer Credit) வழங்கப்படும். “ஒரு இயக்குநரின் கனவை நனவாக்க உதவும் தயாரிப்பாளராக இருக்க வேண்டும். அதுதான் என் ஆசை. எங்கள் நிறுவனத்தில் தொடர்ந்து நல்ல படங்கள் செய்வோம் என்றார்.

நடிகை நளினி பேசியதாவது., எங்களை இங்கே கொண்டு வந்த தயாரிப்பாளர் கருப்பையா அவர்களுக்கு என் நன்றி. அவர் ஒருவரையும் மறக்காமல் நன்றி சொன்னது உண்மையிலேயே அவரது அர்ப்பணிப்பு. இப்படிப்பட்ட தயாரிப்பாளர்கள் இருந்தால் இந்த நிறுவனம் பெரிய உயரம் அடையும்.
சூரஜ் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது. அவருடைய உழைப்பும் தொழில்முறை அணுகுமுறையும் எனக்கு பெரிய பாடம். ஒரு சிறிய தவறும் விட்டுவைக்காமல் மீண்டும் மீண்டும் செய்வது அசத்தல். இந்த படத்தில் அவர் செய்த கதாபாத்திரம் வேறு லெவல். அவரை தவிர யாராலும் இப்படிச் செய்ய முடியாது. தேவதர்ஷினி அம்மா இந்த படத்தில் மிகவும் அழகாக நடித்திருக்கிறார். அவருக்கு இந்த வாய்ப்பு கொடுத்த கென்னுக்கு நன்றி. அந்த வாய்ப்பை அவர் மிக நேர்த்தியாக பயன்படுத்தியிருக்கிறார்.

இந்த படத்தில் நடித்த குழந்தைகள் எல்லோரும் அசத்தியிருக்கிறார்கள். அவர்களின் திறமையை பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். இயக்குநர் கென் மற்றும் அவருடைய குழு உண்மையிலேயே வேறு லெவல். ஒவ்வொருவரிடமும் சிறந்த நடிப்பை எடுத்திருக்கிறார்கள். கென் இந்தப்படத்திற்காக அத்தனை உழைத்திருக்கிறார். அவர் இன்னும் பெரிய உயரத்திற்கு செல்வார். இந்த “யூத்” படத்தில் வேலை செய்தது எனக்கு ஒரு புதிய energy கொடுத்தது. இந்த குழுவோடு இருந்த அனுபவம் எனக்கு மறக்க முடியாதது. இந்த சந்தோஷத்தை கொடுத்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி என்றார்.

நடிகை தேவதர்ஷினி பேசியதாவது., இந்த வெற்றி விழாவில் நிற்பது ஒரு பெரிய மகிழ்ச்சி. முதலில் தயாரிப்பாளர் கருப்பையா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. ஒரு அசிஸ்டென்ட் டைரக்டராக இருந்து, இந்த படத்தை நம்பி தயாரிப்பாளராக மாறியது பெரிய விஷயம். ஒரு புது பையன் கையில் காசே இல்லாத நிலையில் இருந்தாலும், இந்த கதையை நம்பி படம் எடுத்ததற்கு நன்றி. எதையும் மாற்றாமல், அதே உண்மையோடு படத்தை கொண்டு வந்தது மிகப்பெரிய பலம். ஜி.வி. பிரகாஷ் மற்றும் அவருடைய குழுவுக்கு என் நன்றி. இந்த படத்தின் மியூசிக் எங்களுக்கு பெரிய நம்பிக்கை கொடுத்தது. விக்கி மற்றும் குழு எந்த சமரசமும் இல்லாமல் அழகாக ஒவ்வொரு காட்சியையும் உருவாக்கியிருக்கிறார்கள். இந்த படத்தை மிகவும் அழகாக எடிட் செய்திருக்கிறார்கள். ராமு மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கும் என் நன்றி.

சூரஜ் சார் ஒரு அற்புதமான நடிகர். அவருடன் வேலை செய்தது எனக்கு பெருமை. அவருடைய அர்ப்பணிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. நளினி அம்மாவுடன் மீண்டும் வேலை செய்தது ஒரு அழகான அனுபவம். இந்த படத்தில் நடித்த குழந்தைகள் மற்றும் இளம் கலைஞர்கள் அனைவரும் அசத்தியிருக்கிறார்கள். ஒவ்வொருவரும் இந்த படத்தை இன்னும் சிறப்பாக்கியிருக்கிறார்கள். இந்த படம் எங்கள் எல்லாருக்கும் ஒரு முக்கியமான மைல்கல்லாக இருக்கும். கென் இந்த படத்தில் பல பரிமாணங்களில் உழைத்திருக்கிறார். அவருடைய நேர்மை, அன்பு மற்றும் நேர்மையான அணுகுமுறை மிகப்பெரியது. அவர் மிகப்பெரிய இடத்தை அடைவார். இந்த அழகான அனுபவத்தை கொடுத்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி என்றார்.

நடிகை மீனாட்சி பேசியதாவது., இந்த படத்தின் மூலம் எனக்கு கிடைத்த அன்பு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்று கேப் டிரைவர் கூட என்னை கேரக்டர் பெயரால் அழைத்தது எனக்கு பெருமையாக இருந்தது. அதுதான் இந்த படத்தின் உண்மையான வெற்றி என்று நான் நினைக்கிறேன். நான் பல வருடங்களாக நடித்து வந்தாலும், இப்படியான அடையாளம் கிடைத்தது இப்போது தான். அதற்கு காரணம் இந்த “யூத்” படம். கென், உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த வாய்ப்பை கொடுத்த தயாரிப்பாளர் கருப்பையா அவர்களுக்கும் நன்றி.
இந்த படக்குழுவுடன் இருந்த அனுபவம் எனக்கு குடும்பம் கிடைத்த மாதிரி. சின்னா, ஈஸ்வர், டேனி, லோகேஷ் எல்லாரும் எனக்கு குடும்பமாகி விட்டார்கள். இந்த நட்புதான் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. 2023-ல் தொடங்கிய இந்த பயணம் இன்று வெற்றியாகியுள்ளது. அந்த நாள் முதல் இன்று வரை என்னை நம்பியதற்கு நன்றி. விக்கி அண்ணா, எங்களை அழகாக காட்டியதற்கு நன்றி. சூரஜ் சார், உங்களுடன் ஒரே படத்தில் இருந்தது எனக்கு பெருமை.
சோனி, கேரன் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றி. இந்த படத்தில் வேலை செய்த ஒவ்வொருவருக்கும் என் நன்றி என்றார்.

நடிகர் சுராஜ் பேசியதாவது., இந்த படம் எனக்கு ஒரு பெரிய அனுபவத்தை கொடுத்தது. அதற்காக இயக்குநர் கென்னுக்கு என் மனமார்ந்த நன்றி. அவர் ஒரு நடிகர் மட்டுமல்ல, மிகத் தெளிவான இயக்குநர். அவருடைய தீவிரமும் அர்ப்பணிப்பும் தான் இந்த வெற்றியின் காரணம். இன்னும் பெரிய உயரங்களை அவர் அடைவார் என்று நம்புகிறேன். கென் மற்றும் அவருடைய குழுவுக்கு சிறப்பு நன்றி. இந்த படத்தில் வேலை செய்த அனுபவம் மிகவும் அழகான நினைவாக இருக்கும். தயாரிப்பாளர் கருப்பையா அவர்களுக்கு என் நன்றி. அவர் ஒரு பெரிய தயாரிப்பாளராக உயர்வார் என்று நம்புகிறேன். நளினி அம்மா, தேவதர்ஷினி அம்மா உங்களுடன் வேலை செய்தது பெருமை. எனக்கு தமிழ் கற்றுக்கொள்ள உதவிய அனைவருக்கும் நன்றி.
இந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். என் நண்பர்கள் மற்றும் சக நடிகர்களுக்கும் என் நன்றி. இந்த வாய்ப்பை எனக்கு அறிமுகப்படுத்திய நண்பருக்கும் நன்றி. இந்த படத்தை பார்த்து பாராட்டிய அனைவருக்கும் நன்றி. சிறப்பாக என்னை பாராட்டிய சிலம்பரசன் அவர்களுக்கு நன்றி. இந்த படத்தை வெற்றியாக்கிய ரசிகர்கள் அனைவருக்கும் என் நன்றி என்றார்.

கென் கருணாஸ் பேசியதாவது., இந்த படத்தின் பயணத்தில் நான் பலருக்கு நன்றி கடன் பட்டிருக்கிறேன். அதனால் தான் இந்த நன்றி விழாவை நடத்துகிறோம். இந்த பயணத்தில் என்னை ஆதரித்த ஒவ்வொருவருக்கும் என் நன்றி. ஜிஎஸ்ஆர் சார், உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. உங்களுடைய உற்சாகமும் அர்ப்பணிப்பும் எங்களை மிகவும் ஊக்கப்படுத்தியது. ஷூட்டிங் ஸ்பாட்டில் கூட உங்கள் எனர்ஜி எப்போதும் வேற லெவலில் இருந்தது. அந்த நேர்மையான அணுகுமுறை எங்களுக்கு ஒரு பெரிய உதாரணம். இந்த படத்தில் உங்களுடன் வேலை செய்தது மகிழ்ச்சி. இந்த வெற்றிக்கு காரணமான ஒவ்வொருவருக்கும் என் நன்றி.

டேனி, லோகித், பிரின்ஸ், ஈஷ்வர், சின்னா இவர்கள் இல்லாமல் நான் இன்று இந்த மேடையில் நிற்க முடியாது. மொட்டை மாடியில் ஆரம்பித்த இந்த நட்பு இன்று இங்கே வந்திருக்கிறது. இந்த படத்திற்கும், இந்த பயணத்திற்கும் இவர்கள்தான் காரணம். விக்கி அண்ணாவுக்கு என் மனமார்ந்த நன்றி. என்னுடைய உணர்வுகளையும் பயத்தையும் புரிந்து, என்னை எப்போதும் உற்சாகப்படுத்தினார். ஃபைட் மாஸ்டர் கலையாண்ணாவுக்கு என் நன்றி. தனது பிஸியான நேரத்திலும் சம்பளம் பார்க்காமல் வந்து எங்களுக்கு உதவினார். அது எங்களுக்கு மறக்க முடியாத உதவி. காவியா அக்காவுக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த முழு பயணத்திலும் எனக்கு பெரிய ஆதரவாக இருந்தார். என் தோற்றத்திலிருந்து நம்பிக்கை வரை அனைத்திலும் உதவினார். விக்கி அண்ணா எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்தார்.

ராமு சார், உங்களுடைய உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு எங்களுக்கு பெரிய பலம். நான் கேட்கும் ஒவ்வொரு விஷயத்தையும் மறுநாளே செய்து கொடுத்தீர்கள். நீங்கள் இல்லாமல் இந்த படம் இப்படியாக இருக்காது. இந்த படத்தில் நடித்த அனைத்து இன்ஃப்ளூயன்சர்களுக்கும் என் நன்றி. உங்களுடைய திறமை இந்த படத்தை மேலும் அழகாக்கியது. முகேஷ் அண்ணா, உங்கள் குரலுக்கு நான் பெரிய ரசிகன். நன்றி. என் மூன்று ஹீரோயின்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. என்னை நம்பி, முழு ஒத்துழைப்புடன் நடித்ததற்கு நன்றி.
முதலில் எங்கள் எடிட்டர் நாஷ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. அவருடைய கருத்துகளும் வழிகாட்டுதலும் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. அவருடைய உதவியாளர் ஹரிக்கும் என் நன்றி. ஒவ்வொரு காட்சியையும் சிறப்பாக மாற்ற அவருடைய பங்களிப்பு அதிகம்.பிரவீன் ஆண்டனி, விக்னேஷ் ராஜா, வினோத் ஆகியோருக்கும் என் நன்றி. அவர்களுடைய ஊக்கமும் வழிகாட்டுதலும் இந்த படத்திற்கு முக்கியம். தமிழ் அண்ணா, உங்கள் நேர்மையான ஆலோசனைகளுக்கு நன்றி.

ஜி.வி. பிரகாஷ் அண்ணா, உங்கள் உதவியை நான் எப்போதும் மறக்க மாட்டேன். என்னுடன் நடித்த நண்பர்கள் பப்ளோ, சின்னா, ஈஷ்வர் உங்களுக்கு நன்றி. நட்பு மற்றும் ஆதரவு இந்த பயணத்தில் மிக முக்கியம். நளினி மேம், உங்கள் நேர்மையான அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. நளினி மேடம் என் அம்மாவுக்கு பிறகு அதிகம் என்னை நம்பினார். தேவதர்ஷினி மேம், உங்கள் நம்பிக்கையும் ஒத்துழைப்பும் எங்களுக்கு பெரிய பலம். சூரஜ் சார், உங்கள் நடிப்பு இந்த படத்தின் முக்கியமான பலம். இந்த படத்தில் உழைத்த ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றி. நான் கேட்ட அனைத்தையும் தந்து என்னை முழுமையாக நம்பி இப்படத்தை தயாரித்த கருப்பையா அண்ணாவுக்கு நன்றி என்றார்.



