“பிரேக் பாஸ்ட்” படத்தின் விமர்சனம்

கிரிஜா வரதராஜ் தயாரிப்பில், ராணவ், ரோஸ்மின், சம்பத்குமார், கஸ்தூரி, கிருத்திக் மோகன், அமிதா, அர்ச்சனா உள்ளிட்டோர் நடிப்பில், ஜீவி பிரகாஷ் இசையில், காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “பிரேக் பாஸ்ட்”.

கதைப்படி.. இனையத்தில் அறிமுகமாகி காதலர்களாக திருமணம் செய்து கொள்கிறார்கள் கிருத்திக் மோகன், அமிதா ஜோடி. திருமணமான சில மாதங்களிலேயே இருவருக்கும் ஒத்து வராததால், விவாகரத்து பெறுவதற்காக நீதிமன்றம் செல்கிறார்கள். எப்படியாவது விவாகரத்து பெற்றுவிட வேண்டும் என நீதிமன்றத்தில் போராடுகின்றனர். வழக்கை விசாரித்த நீதிபதி மனநல மருத்துவர் கஸ்தூரியிடம் கவுன்சிலிங் அனுப்புகிறார். இந்த இளம் ஜோடிகளின் புடிவாத நடவடிக்கைகளை பார்த்த கஸ்தூரி, தான் பார்த்து வியந்த படத்தின் கதையை இவர்களுக்கு சொல்கிறார்.

அதில் தொழிலதிபரின் ஒரே மகளான ரோஸ்மின், ஏழை குடும்பத்தில் பிறந்து கிடைக்கும் வேலைகளை செய்து குடும்பத்தைக் காப்பாற்ற துடிக்கும் இளைஞர் ராணாவை காதலித்து, தந்தையின் எதிர்பை மீறி திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்திற்கு பிறகு பல்வேறு காலகட்டங்களில் இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்படுகிறது. இவர்களது திருமண வாழ்க்கை என்னானது ? கிருத்திக் மோகன், அமிதா ஜோடி விவாகரத்து பெற்றார்களா ? இணைந்தார்களா ? என்பது மீதிக்கதை..

இன்றைய இளைய சமுதாயத்தின் மனநிலையை அப்படியே திரையில் பிரதிபலிக்கிறது “பிரேக் பாஸ்ட்” திரைப்படம். இருவேறு காலகட்டங்களில் நடைபெறும் காதல் சம்பவங்களை ரசிக்கும்படியாக, இளமை ததும்பும் வண்ணம் திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் இயக்குநர் காந்தி கிருஷ்ணா.

வைரமுத்து வரிகளில், ஜீவி பிரகாஷ் இசையில், கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். பாடல் வரிகள், நடனம் அற்புதம்.

அதேபோல் படத்தில் நடித்துள்ள இரண்டு காதல் ஜோடிகள், அர்ச்சனா, சி. ரெங்கநாதன், ரவி மரியா உள்ளிட்டோர் நடிப்பும் சிறப்பு.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button