“லவ் ஓ லவ்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

மகேஷ் ராஜேந்திரன் எழுதி, இயக்கி, தினேஷ் ராஜ் தயாரித்துள்ள லவ் ஓ லவ் படத்தை Zinema Media & Entertainment நிறுவனம் தயாரித்துள்ளது.
படத்திற்கு பி. ஜி. முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். Wayne Pavey, Pradeep PJ, FOXn ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர். பவிஷ், நாக துர்கா, செல்வராகவன், கே. எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் திரையுலக பிரபலங்கள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும்
இப்படத்தின் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் தயாரிப்பாளர் தினேஷ் பேசும்போது, தனஞ்செயனுடன் சேர்ந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி.
கடந்த 21/2 ஆண்டு காலமாக தூக்கமில்லாமல் ஆத்மார்த்தமாக உழைத்திருக்கிறார். நீண்ட நாட்களாக சரியான நாயகனை தேடி பவேஷ் கிடைத்தார். நாயகி தெலுங்கு படத்தில் நடித்திருக்கிறார். யூடியூப்-ல் நடனம் மூலம் பிரபலமானவர்.
இசையமைப்பாளருக்கு இது முதல் படம். ஆனால், பரிமளா & கோ முதலில் வெளியாகி விட்டது. இப்படத்தின் கதை அனைவருக்கும் நெருக்கமாக இருக்கும். கருத்து சொல்லக்கூடிய படமாகவும் அதே சமயம் நகைச்சுவையுடனும் இருக்கும் என்றார்.

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசும்போது, நல்ல திரைப்படங்களை மக்கள் கொண்டாட தவறியதே இல்லை. அதற்கு சிறந்த உதாரணம் சமீபத்தில் வெளியாகி வெற்றி நடை போட்டு கொண்டிருக்கும் நூறு சாமி படம் தான். சசி 10 படங்கள் தான் கொடுத்திருக்கிறீர்கள், இன்னும் 100 படம் கொடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். நூறு சாமி படம் இந்த வருடத்தின் சிறந்த படமாக பேசப்படும். இந்த படத்திற்கு பிறகு வனிதா பெரிய வலம் வருவார். ஆரம்ப காலத்தில் தனுஷ் சாரை பார்த்தது போல பவேஷை பார்த்ததும் தோன்றியது. இன்னும் 2 படங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். பெரிய நாயகனாக வருவார். ஆனால் தொடர்ந்து வெற்றி பெற வேண்டுமென்றால் இதே பணிவோடு இருக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் என்றார்.

தயாரிப்பாளர் தாணு பேசும்போது, 20 கோடி செலவாகும் பட்ஜெட்டை 10 கோடியாக்கும் தனஞ்செயனுடன் கூட்டு வைத்திருக்கிறீர்கள். காதல் எப்போதும் மாறாது, அந்த காதலை சிறப்பாக கொடுத்திருக்கிறார்கள். இந்த படம் வெற்றியடைய வாழ்த்துகள் என்றார்.

நடிகர் சித்ரா லட்சுமணன் பேசும்போது, தனஞ்செயன் பவிஷை பார்த்து எவ்வளவு வேண்டுமானாலும் சம்பளம் வாங்கி கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார். நாக துர்காவிடம் யூடியூப் பக்கம் போகாதீர்கள் என்றார். அதை கேட்காதீர்கள். அது தான் உங்களை இந்த இடத்தில் உட்கார வைத்திருக்கிறது. கஸ்தூரி ராஜா பேரனை நாயகனாக்கி விட்டார். பவேஷ் காதல் காட்சிகளிலும் உணர்வு பூர்வமான காட்சிகளிலும் நன்றாக நடித்திருக்கிறார் என்றார்.

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளர் கதிரேசன் பேசும்போது, பாடலாக இருந்தாலும் பின்னணி இசையாக இருந்தாலும் எந்த இடத்தில் என்ன மாதிரியான பாதிப்பு கொடுத்தால் படம் வெற்றியாகும் என்பதை தெரிந்து கொண்டு இசையமைத்திருக்கும் Wayne Pavey, Pradeep PJ, FOXn இருவருக்கும் பாராட்டுகள் என்றார்.

இயக்குனர் கஸ்தூரி ராஜா பேசும்போது, பவிஷ் அம்மா இன்று வர இயவில்லை, அதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். தனுஷின் பிரதி தான் பவேஷ். உன்னுடைய இயக்குனரோ, தயாரிப்பாளரோ அவர்கள் சொன்ன நேரத்திற்கு சென்று விடு என்று தனுஷிடம் கூறினேன். இன்று வரை அதை பின்பற்றி கொண்டிருக்கிறார். அதே போல் பவேஷ் தன்னை தானே வளர்த்துக் கொள்ள வேண்டும். இப்போதெல்லாம் நான் யாருக்கும் அறிவுரை சொல்வது கிடையாது. என்னுடைய வீட்டில் பவேஷ் ஸ்பெஷல், என் மனைவிக்கு செல்வராகவன் ஸ்பெஷல். எனக்கு பவேஷ் அம்மா ஸ்பெஷல். 3 பாடல்களிலேயே வியக்க வைத்து விட்டான் பவேஷ் என்றார்.

இயக்குனர் ஆர்.கே. செல்வமணி பேசும்போது, ரோஜாவை அறிமுகப்படுத்தியது செல்வமணி என்பது மாறி, ரோஜாவின் ராஜா செல்வமணி என்ற பெயர் வந்துவிட்டது. அது தான் நடிகருக்கு இருக்கும் சிறப்பு. லவ் ஓ லவ் பெயருக்கு ஒரு சிறப்பு இருக்கிறது. இந்த கதையை 1 1/2 மணி நேரம் கூறினார். கேட்கும் போது நேரில் பார்ப்பது போல் இருந்தது. தனஞ்செயன் வாயால் நல்ல பெயர் எடுப்பது கஷ்டம். அதை இந்த படத்தின் இயக்குனர் மகேஷ் வாங்கியிருக்கிறார். அன்று படம் வெளியாவது தயாரிப்பாளர் கட்டுப்பாட்டில் இருந்தது, பிறகு நடிகரிடம் இருந்தது. இப்போது ஓடிடி -யிடம் இருக்கிறது. இங்கு இருக்கும் ஓடிடி அலுவலகம் மும்பையில் இருக்கிறது. 200 படங்கள் இலவசமாக கொடுத்தால் கூட வாங்க முடியாத சூழ்நிலை இருக்கிறது. வாரந்தோறும் 50 படங்களாவது ஓடிடியில் வெளியானால் நன்றாக இருக்கும். ரஜினியிடம் இருக்கும் தன்னம்பிக்கை, முதல் படத்திலேயே தனுஷுக்கு இருந்தது. அதே நம்பிக்கை இன்று பவிஷிடம் பார்க்க முடிகிறது என்றார்.

இயக்குனர் சசி பேசும்போது, பரிமளா & கோ படத்திலேயே பாலாஜி ஸ்ரீராமின் இசையை பார்த்தேன். ஒரு பாடலே அந்த படத்தை அடுத்த இடத்திற்கு கொண்டு சென்றது. அதே போல இந்த படமும் பெரிய வெற்றி பெறும் என்றார்.

நடிகை நாக துர்கா பேசும்போது,
டீஸருக்கு நீங்க கொடுத்த ஆதரவிற்கு நன்றி. அதே போல படத்திற்கும் ஆதரவு தருவீர்கள் என்று நம்புகிறேன் என்றார்.

நடிகர் பவிஷ் பேசும்போது, எந்த மேடையாக இருந்தாலும், எங்கு சென்றாலும் என்ன செய்தாலும் தனுஷ் சாருக்கு தான் முதலில் நன்றி சொல்வேன். தனஞ்செயன் மற்றும் தினேஷ் சாருக்கு நன்றி. மகேஷ் சார் கதை கூறுவதில் சிறந்தவர். பிரதீப் மற்றும் இருவரும் சேர்ந்து பாக்சன் என்ற பெயரில் இசையமைத்திருக்கிறார்கள். சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள்.
நாக துர்கா பயிற்சி இல்லாமல் பார்த்ததுமே நடனம் ஆடி வியக்க வைத்தார். சண்டை பயிற்சி இயக்குனர் என்னுடைய பணியை எளிமையாக்கினார் என்றார்.

இயக்குனர் மகேஷ் ராஜேந்திரன் பேசும்போது, ஒன்றரை மணி நேரத்தில் வாழ்க்கையை மாற்ற முடியுமென்றால் கடவுளால் தான் முடியும். அந்த வகையில் தனஞ்செயனுக்கும் தினேஷ் சாருக்கும் நன்றி. கலை இயக்குனர் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார். நாக துர்கா நன்றாக நடித்திருந்தீர்கள்.
இந்த படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் என்றார்.

நடிகை வனிதா விஜயகுமார் பேசும்போது, நான் சினிமாவை விட்டு சென்ற பிறகும் மீண்டும் என்னை நடிக்க வைத்திருக்கிறார்கள். என்னுடைய கதாபாத்திரம் நன்றாக இருக்கிறது என்று பாராட்டினார்கள். எனக்கும் பார்க்க வேண்டும் என்று ஆவலாக இருக்கிறது. இன்றைய காலத்திற்கு தேவையான தலைப்பு லவ் ஓ லவ். அனைவரும் திரையரங்கம் சென்று பாருங்கள்.
நேர்மையான விமர்சனம் கொடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button